வஞ்சிக் காண்டம் $ வரந்தரு காதை

#செங்குட்டுவன் தேவந்தியிடம் மணிமேகலையின் துறவு பற்றி வினாவுதல்#
வட திசை வணங்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
‘வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, ’ என-

~தேவந்தி மணிமேகலையின் துறவு த்தல்#

‘கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க’ என்று ஏத்தி,
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு க்கும்:
‘மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின்
ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின;
புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ
நிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;
தலைக்கோல் ஆசான் பின் உளனாக,
குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ?” என,
மாதவி நற்றாய் மாதவிக்கு ப்ப-
“வருக, என் மட மகள் மணிமேகலை!” என்று,
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்-
தம்மின் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், “சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள்” என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்:
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை
திரு விழை கோலம் நீஙினள் ஆதலின்,
அரற்றினென்’ என்று, ஆங்கு, அரசற்கு த்தபின்-

~தேவந்தியின்மேல் சாத்தன் ஆவேசமுற்று எழுதல்#

குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்;
திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ஓச்சினள்: கால் பெயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்-

~தெய்வம் உற்ற தேவந்தியின் #

‘கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும்,
ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்:
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய
அணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின்,
ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
“குறிக்கோள் தகையது; கொள்க” எனத் தந்தேன்;
உறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை
முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன்’ என்றலும்-

~சாத்தனது வரலாற்றையும், அவன் கரகம் தந்ததையும் மாடலன் கூறுதல்#

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
‘கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து,
கூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
“ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக” என,
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர்,
மூவா இள நலம் காட்டி, “என் கோட்டத்து,
நீ வா” என்றே நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண்,
அங்கு உறை மறையோனாகத் தோன்றி,
உறித் தாழ் கரகமும் என் கைத் தந்து,
குறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்:
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,
ஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,
“அந் நீர் தெளி” என்று அறிந்தோன் கூறினன்-

~மாடலன் தெய்வம் சுட்டிய மூன்று பெண்களின் மேலும் கரக நீரைத் தெளித்தல்#

மன்னர் கோவே! மடந்தையர்-தம்மேல்
தெளித்து ஈங்கு அறிகுவம்’ என்று அவன் தெளிப்ப-

~பெண்கள் மூவரும் பழம் பிறப்பு உணர்ந்து, கூறிய செய்திகள் கண்ணகி தாய் கூற்று#

ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,
‘புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி,
காதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பெறு மகளே! என் துணைத் தோழீ!
வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!’-

~கோவலன் மாதா வார்த்தை#

‘என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-
தன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து,
போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என் மகன், வாராய்!’-

~மாதரி வார்த்தை#

வையை வான் துறைப் பெயர்ந்தேன்;
உருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்;
எந்தாய்! இளையாய்! எங்கு ஒளித்தாயோ?’-
என்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,
பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,
குதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ-

~செங்குட்டுவனது முகக் குறிப்பை அறிந்து, மாடலன் கூறுதல்#

தோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன்-தன் முகம் நோக்க,
‘மன்னர் கோவே, வாழ்க!’ என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது ப்போன்;
‘மறையோன் உற்ற வான் துயர் நீங்க,
உறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்,
மேல்நிலை உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அறம் செய்திலர்; அதனால்,
அம் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பொன்-கொடி-தன்மேல் பொருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின்
உடன்வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்,
ஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்-
நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,
அறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை-
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
கை அகத்தன போல், கண்டனை அன்றே;
ஊழிதோறு உழி உலகம் காத்து,
நீடு வாழியரோ, நெடுந்தகை!’ என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-

~பத்தினிக் கோட்டத்திற்கு மானியம் அளித்து, நித்தல் விழாச் செய்யத் தேவந்தியை நியமித்து, கோட்டத்தை வலம் செய்து, சந்நிதியில் செங்குட்டுவன் நிற்றல்#

பாடல்சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டுக்
கலி கெழு கூடல் கதழ் எரி மண்ட
முலைமுகம் திருகிய மூவா மேனி
பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
‘நித்தல் விழா அணி நிகழ்க’ என்று ஏவி,
‘பூவும், புகையும், மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க’ என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி,
உலக மன்னவன் நின்றன் முன்னர்-

~ஆரிய மன்னர் முதலியோரது வேண்டுகோள்#

அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட-
~பத்தினித் தெய்வத்தின் அருள்வாக்கு#
‘தந்தேன் வரம்!’ என்று எழுந்தது ஒரு குரல்-
~செங்குட்டுவன் வேள்விச் சாலை புகுதல்#

ஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும்,
ஓங்கு இருந் தானையும், யோடு ஏத்த,
வீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்-

~தேவந்தியின்மேல் கண்ணகி ஆவேசித்து, பத்தினி்க் கோட்டம் சென்ற இளங்கோ அடிகளது துறவின் சிறப்பினைப் புகழ்ந்துரைத்தல்#

யானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,
தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி,
‘வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை
“அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு” என்று,
செய்தவன் மேல் உருத்து நோக்கி,
கொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்
செங்குட்டுவன்-தன் செல்லல் நீங்க,
பகல் செல் வாயில் படியோர்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி,
சிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து’ என்று-
~அடிகள் அருளும் அறிவுரை#

என் திறம் த்த இமையோர் இளங்கொடி-
தன் திறம் த்த தகைசால் நல் மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!-
பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்,

~கட்டுரை#

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும், குரவையும், விரவிய கொள்கையின்,
புறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று.

 

&

 

மணிமேகலை துறவைப்பற்றி தேவந்தி சொன்னாள். அவள் மேல் சாத்தன் ஆவேசித்துப் பேசுகிறான். கண்ணகியின் தாய், கோவலனின் தாய், மாதரி என்பவர், தம் அடுத்த பிறப்பிற் சிறுகுழந்தைகளாக அங்கு வந்து, தாம் மீண்டும் பிறந்ததன் காரணம் பற்றிக் கூறுகின்றனர். பத்தினிக்குப் பூசை செய்யத் தேவந்தி அனுமதி பெறுகிறாள். பல நாட்டு மன்னரும் வணங்கி விடைபெறுகின்றனர். வேள்விச் சாலைக்குச் செங்குட்டுவன் செல்லுகின்றான். நூலாசிரியருக்குக் கண்ணகி அவர்தம் முன்வரலாறு உரைக்கின்றாள். முடிவில் உலகோர்க்கான அறிவுரைகளுடன் சிலப்பதிகாரம் முடிவடைகிறது.

வஞ்சிக் காண்டம் $ வாழ்த்துக் காதை

உரைப் பாட்டு மடை#

குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்தகாலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து
அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்,
‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’
என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி,
அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி,
பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து,
நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி;
வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால்
பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக்
கடவுள்-மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து
மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில்
சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன்
புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து,
குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல்
உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு;
மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும்,
எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த
தேவந்தியும் உடன் கூடி
‘சேயிழையைக் காண்டும்’ என்று,
மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு,
அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி;
ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு;
மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு;
நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த
செங்குட்டுவற்குத் திறம் ப்பர்-மன்.

~தேவந்தியின் சொல்#

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.

~காவற்பெண்டின் சொல்#

மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்.

~அடித் தோழியின் சொல்#

தன் பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொன் தொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.

~தேவந்தியின் அரற்று#

செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ?

~காவற்பெண்டின் அரற்று#

கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
‘சாவது-தான் வாழ்வு’ என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ, அன்னை?

~அடித் தோழியின் அரற்று#

காதலன்-தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு யும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ?

~தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது#

‘ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல்’ என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ?

~செங்குட்டுவன் கூற்று#

என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்!

~கண்ணகி செங்குட்டுவனுக்குக் கடவுள் நல்லணி காட்டியது#

தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம்.

~வஞ்சி மகளிரின் சொல்#

வஞ்சியர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையான் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.

‘செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர்’ என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம்.

~ஆயத்தார் சொல்#

‘வானவன், எம் கோ, மகள்’ என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்.

~வாழ்த்து#

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே!

மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே!

~எல்லா! நாம்-#

காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார்.

~அம்மானை வரி்#

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை.

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன்காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை:
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.

அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை

~கந்துக வரி#

பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே.

பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவ்ன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே.

துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே.
~ஊசல் வரி#

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.

ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்தவா பாடி, ஆடாமோ ஊசல்.

வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.

~வள்ளைப் பாட்டு#

தீம் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்

சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்:
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்:
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல்

~பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்துதல்#

ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், ‘நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க!’ என்று.

 

&

கண்ணகிப் படிமத்தின் கடவுள் மங்கலம் நடைபெற்றது. செங்குட்டுவன் வந்திருந்தான். பல சிற்றரசர்களும் வந்து திறை செலுத்தினர். தேவந்தி முதலியோர் கண்ணகி கோயிலுக்கு வந்து அரற்றினர். கண்ணகி தேவ வடிவிலே தோன்றுகின்றாள்; செங்குட்டுவனையும் வாழ்த்துகின்றாள்.

வஞ்சிக் காண்டம் $ நடுகற் காதை

மாலைக் காலத்தின் வருகை#

தண் மதி அன்ன தமனிய நெடுங் குடை
மண்ணகம் நிழல் செய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் தொடித் தடக் கையின் ஒண் மலர்ப் பலி தூஉய்,
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்,
‘உலக மன்னவன் வாழ்க!’ என்று ஏத்தி,
பலர் தொழ, வந்த மலர் அவிழ் மாலை-
போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர்
யானை வெண் கோடு அழுத்திய மார்பும்,
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
வை வாள் கிழித்த மணிப் பூண் மார்பமும்,
மைம்மலர் உண் கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ;
‘அகில் உண விரித்த, அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து, முரி கருஞ் சிலைக் கீழ்,
மகரக் கொடியோன் மலர்க் கணை துரந்து,
சிதர் அரி பரந்த செழுங் கடைத் தூது

மருந்தும் ஆயது, இம்மாலை’ என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விரிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர்-தம்மால்
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து;
காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி;
வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முறைப் பாலையின்,
துத்தம் குரலாத் தொல் முறை இயற்கையின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின்,
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் போல,
உலகு தொழ, தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க-

~நிலாவின் ஒளி்#

மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் சேக்கையும்,
மண்ணீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
வெண் கால் அமளியும், விதான வேதிகைகளும்,
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள-

~செங்குட்டுவன் வேண்மாளின் இருப்பிடம் செல்லுகையில் நிகழ்ந்த சிறப்புகள்#

படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்,
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனை மணி அரங்கின்,
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி-
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வணர் கோட்டு யாழும்,
பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வரி வெண் சாந்தும்,
கூனும் குறளும், கொண்டன, ஒருசார்;
வண்ணமும் சுண்ணமும், மலர்ப் பூம் பிணையலும்,
பெண் அணிப் பேடியர் ஏந்தினர், ஒருசார்;
பூவும், புகையும், மேவிய விரையும்,
தூவி அம் சேக்கை சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆடையும், அணிதரு கலன்களும்,
சேடியர் செல்வியின் ஏந்தினர், ஒருசார்-

~செங்குட்டுவன் வேண்மாளுடன் சாக்கைக் கூத்தைக் கண்டு மகிழ்தல்#

ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம்
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி:
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய்புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க- இரு நிலம் ஆள்வோன்

~செங்குட்டுவன் ஓலக்க மண்டபத்தில் இருக்க, சோழ பாண்டியரின் நாடு சென்ற நீலன் முதலியோர் வந்து வணங்குதல்#

வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் –
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி,
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின்,
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-

~சோழ பாண்டியர் சொன்னவற்றை நீலன் செங்குட்டுவனிடம் தெரிவித்தல்#

‘தும்பை வெம்போர்ச் சூழ் கழல் வேந்தே!
செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு, ஆங்கு,
வச்சிரம், அவந்தி, மகதமொடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரின் சென்று, தகை அடி வணங்க,
‘நீள் அமர் அழுவத்து, நெடும் பேர் ஆண்மையொடு
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று’ என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு த்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை”-
ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
“ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு,
கயந் தலை யானையின் கவிகையின் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோர்-தம்மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது” என்றனன் போர் வேல் செழியன்’ என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-

தாமரைச் செங் கண் தழல் நிறம் கொள்ளக்
கோமகன் நகுதலும்- குறையாக் கேள்வி
~மாடலன் மன்னனைப் போற்றி, சீற்றம் தணிய வேண்டுதல்#

மாடலன் எழுந்து, ‘மன்னவர் மன்னே,
வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்தி
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்,
சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்;
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை,
கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ்நாட்கள்
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய், வாழி!
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்-

~யாக்கை முதலியவற்றின் நிலையாமையை மாடலன் எடுத்துரைத்தல்#

வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன்பின்னும்,
அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணி, நின் ஊங்கணோர் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
“போற்றி மன் உயிர் முறையின் கொள்க” என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி,
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு
உணர்வு உடை மாக்கள் க்கல் வேண்டா,
திரு ஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை-

~உயிரின் தன்மையை அறிவுறுத்தல்#

விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி,
கூடிய கோலத்து ஒருங்கு நின்று, இயலாது;
“செய் வினை வழித்தாய் உயிர் செலும்” என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க, வய வாள் வேந்தே!-

~பெரு வேள்வியை விரைந்து செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுதல்#

அரும் பொருள் பரிசிலேன் அல்லேன், யானும்;
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி,
புல வரை இறந்தோய்! போகுதல் பொறேஎன்;
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும்,
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்,
“நாளைச் செய்குவம் அறம்” எனின், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்;
இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை;
வேள்விக் கிழத்தி இவளொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற,
ஊழியோடு ஊழி உலகம் காத்து,
நீடு வாழியரோ, நெடுந்தகை!’ என்று
மறையோன் மறை நா உழுது, வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின்-

~வேள்வி செய்யச் செங்குட்டுவன் பணித்தல்#

வித்திய பெரும் பதம் விளைந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் வேட்கையின், சூழ் கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயம் தெரி நாவின்,
கேள்வி முடித்த, வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-

~ஆரிய மன்னரைச் சிறைவிடுத்து, வேள்வி முடிந்தபின் நாடு திரும்பலாம் எனச் சொல்லி, அவர்களுக்குச் சிறப்புச் செய்ய வில்லவன் – கோதையை ஏவுதல்#

ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி,
பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி,
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பெரு நெடு நகர்ச் சார்வதும் சொல்லி, ‘அம்
மன்னவர்க்கு ஏற்பன செய்க, நீ’ என,
வில்லவன்-கோதையை விருப்புடன் ஏவி-

~சிறைக் கோட்டம் நீக்கி, வரி தவிர்க்கும்படி அழும்பில் வேளை அனுப்புதல்#

சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும்,
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம்’ என,
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-

~பத்தினிக் கோட்டத்தில் கண்ணகிக்குக் கடவுள்-மங்கலம் செய்ய, தக்காரை ஏவுதல்#

‘அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது,
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது’ என,
பண்டையோர் த்த தண் தமிழ் நல் ,
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின்,
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து;
‘செங்கோல் வளைய உயிர் வாழாமை,
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
‘வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை, யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர்’ என்பதை
வடதிசை மருங்கின் மன்னவர் அறிய,
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து;
மதுரை மூதூர் மா நகர் கேடுற,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சினை வேங்கைப்
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-
‘அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து,
இமையவர் உறையும் இமையச் செவ் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி,
பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள்-மங்கலம் செய்க’ என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு-என்.

&
பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக நாற்றிக் கொண்டாடிய செய்திகளைக் கூறுவது இப்பகுதி.

வஞ்சிக் காண்டம் $ நீர்படைக் காதை

கனக விசயர் தலைமேல் பத்தினிக் கல்லை ஏற்றி, கங்கையில் நீர்ப்படை செய்தல்#

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தி்னிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள;
வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபின் பத்தினிக் கடவுளை
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-

~கங்கையின் தென் கரையில் ஆரிய மன்னர் அமைத்த பாடியில் புகுதல்#

மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும்,
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-

~தக்க முகூர்த்தம் இது என்று நிமித்திகன் கூறல்#

நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து,
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்;
உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்;
நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து,
வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்;
குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்;
கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்-
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய,
தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்;
திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ,
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை,
கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோர்;
நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பெற, வந்த போர் வாள் மறவர்-
‘வருக தாம்’ என, வாகைப் பொலந் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து,
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்,
ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்-

~மாடலன் வந்து வணங்கி, மன்னனை வாழ்த்துதல்#

மாடல மறையோன் வந்து தோன்றி,
‘வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல்- பாணி கனக- விசயர்- தம்
முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க ” என-

~மாடலன் கூறிய யின் பொருளை விளக்க மன்னவன் வேண்டுதல்#

‘பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகைத் திறம் கூறினை, நான்மறையாள!
யாது, நீ கூறிய ப் பொருள் ஈங்கு?” என-

~மாடலன் கூறிய செய்திகள்#

மாடல மறையோன் மன்னவற்கு க்கும்:
‘கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள்.
இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்:
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? சால் சிறப்பின்
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்:
“வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை” என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
“கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்;
அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ?” என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன்
போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
“என்னோடு இவர் வினை உருத்ததோ?” என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்- எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு
என் பதிப் பெயர்ந்தேன். என் துயர் போற்றி,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு க்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி,
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்;
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர்முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
தானம் புரிந்தோன்- தன் மனைக்கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய்- தனக்கு. “நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாதொழிக” என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்;
மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!’ என-

~மாலைப் பிறை கண்டு மன்னவன் நோக்க, கணி எழுந்து த்தல்#

‘தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
‘மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு ’ என-

~மாடலனது கூற்று#

‘நீடு வாழியரோ, நீள் நில வேந்து!’ என,
மாடல மறையோன் மன்னவற்கு க்கும்: ‘நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்;
வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன் காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்:
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி,
செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல்காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என-

~மாலைப் பிறை கண்டு மன்னவன் நோக்க, கணி எழுந்து த்தல்#

மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க,
அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியின் கணி எழுந்து ப்போன்,
‘எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க!’ என்று ஏத்த-

~ மாடலனைத் தனி இடத்து அழைத்து, சோழ நாட்டின் நிலை பற்றிச் செங்குட்டுவன் வினவுதல்#

நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும் பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்
சித்திர விதானத்து, செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
‘இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோல் தன்மை தீது இன்றோ?’ என-

~மாடலன் த்த விடை#

‘எம் கோ வேந்தே, வாழ்க!’ என்று ஏத்தி,
மங்கல மறையோன் மாடலன் க்கும்:
‘வெயில் விளங்கு மணிப் பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்;
குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, செல்லல் காலையும்,
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு’ என்று
அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே-

~மாடலனுக்குப் பொன்னும், நூற்றுவர்- கன்னர்க்கு நாடு செல்ல விடையும் அளித்தல்#

‘பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ- ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், ‘தன் நிறை
மாடல மறையோன் கொள்க’ என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க’ என்று ஏவி-

~ஓடி உயிர் தப்பிய அரசரையும், கனக விசயரையும், ஆரியப் பேடியையும், சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு கஞ்சுக முதல்வரைச் செங்குட்டுவன் ஏவுதல்#

‘தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்;
சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை,
பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை
இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-

~கதிரவன் தோன்ற, சேனையுடன் தென் திசை நோக்கித் திரும்புதல்#

திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய,
வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி,
குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற;
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசைத் தும்பை வாகையொடு முடித்து,
தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-

~செங்குட்டுவன் பிரிவினால் அவனது தேவி வஞ்சி மா நகரில் வருந்தியிருக்கும் நிலை#

நிதி துஞ்சு வியல் நகர், நீடு நிலை நிவந்து
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய,
மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,

~அரசியை ஆயச் செவிலியர் ஆற்றுவித்தல்#

எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம்
அறிந்து பயின்ற ஆயச் செவிலியர்,
‘தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக’ என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்த-

~கூனும் குறளும் சென்று வாழ்த்துதல்#

சிறு குறுங் கூனும் குறளும் சென்று,
‘பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்;
நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக’ என- குறிஞ்சிப் பாணி

~நால் வகை நிலப் பாடல்களையும் கேட்டுக் கோப்பெருந்தேவி மகிழ, செங்குட்டுவன் வஞ்சி மா நகர் வந்து சேர்தல்#

அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த,
‘வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு’ என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-

~உழவர் பாணி#

வட திசை மன்னர் மன் எயில் முருக்கி,
கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம்’ எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-

~கோவலர் பாணி#

தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்
முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டுமிசை இருந்து,
‘வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்’ என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ,
கோவலர் ஊதும் குழலின் பாணியும்-

~நெய்தல் நிலப் பாணி்#

வெண் திரை பொருத வேலை வாலுகத்து,
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
‘வானவன் வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம்’ எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும்-

~அரசி மகிழ, நகரினர் எதிர்கொள, செங்குட்டுவன் வஞ்சியுள் புகுதல்#

ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையின் கோநகர் எதிர்கொள,
வஞ்சியுள் புகுந்தனன், செங்குட்டுவன்-என்.

&

கண்ணகிப் படிவத்திற்கான கல்லினைத் தோண்டிக் கொணர்ந்து, நீர்ப்படை செய்தது முதல், மீண்டும் செங்குட்டுவன் வஞ்சிமா நகரம் திரும்பியது வரை கூறுவது.

வஞ்சிக் காண்டம் $ கால்கோள் காதை

அரசவையில் செங்குட்டுவன் நெடுமொழி கூறுதல்#

அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய
உறை முதல் கட்டில் இறைமகன் ஏற;
ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர்,
தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ,
‘மன்னர்- மன்னன் வாழ்க!’ என்று ஏத்தி,
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப-
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்:
‘இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக்
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகின்;
செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப்
பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக’ என-

~ஆசானது #

‘ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும்,
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால்,
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்;
அமைக நின் சினம்’, என, ஆசான் கூற-

~தக்க முகூர்த்தம் இது என்று நிமித்திகன் கூறல்#

ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று,
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து,
‘வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல்
எழுச்சிப்பாலை ஆக’ என்று ஏத்த-

~ வேந்தன் கட்டளைப்படி, வாளும் குடையும் வட திசைப் பெயர்த்து வைத்தல்#

மீளா வென்றி வேந்தன் கேட்டு,
‘வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க’ என-
உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப,
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப;
இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும்,
தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
‘மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!’ என,
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி;
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர-

~பெரும் படைத் தலைவர்க்குச் செங்குட்டுவன் பெருஞ்சோறு அளித்தல்#
அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த
பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-
~செங்குட்டுவன் வஞ்சி சூடி, தெய்வம் பரவி, காலையில் யானையின்மேல் எழுதல்#

பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து,
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும்
காலை- முரசம் கடைமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி
மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து,
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த,
கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்-

~ஆடகமாடத்துப் பெருமானது சேடத்துடன் வாந்து சிலர் ஏத்த,
செங்குட்டுவன் அதனைப் பெற்றுத் தன் புயத்து அணிதல்#

‘குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க’ என,
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-

~நாடக மடந்தையர் வாழ்த்துதல்#

நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து, ‘கொற்ற வேந்தே!
வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க,
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து,
கண் களிகொள்ளும் காட்சியை ஆக’ என-

~மாகதர் முதலியோர் வாழ்த்துதல்#

‘மாகதப் புலவரும், வைதாளிகரும்,
சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த;
யானை வீரரும், இவுளித் தலைவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
~வஞ்சி மா நகரை விடுத்து, நீலகிரியை அடைந்து, பாடி வீட்டில் அமர்தல்#

தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல, வஞ்சி நீங்கி;
தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும்
வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத,
மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு;
ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து- ஆங்கு;
ஆடு இயல் யானையும், தேரும், மாவும்,
பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன்
இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த,
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்-

~விசும்பு இயங்கும் முனிவர்கள் தோன்ற, செங்குட்டுவன் அவர்களை வணங்குதல்#

இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப,
விசும்பு இயங்கு முனிவர், ‘வியல் நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும்’ என்றே,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து,
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற;
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-
~முனிவர்கள் செங்குட்டுவனை வாழ்த்தி நீங்குதல்#

‘செஞ் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்;
மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய
நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்;
பெரு நில மன்ன! காத்தல் நின் கடன்’ என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-

~கொங்கணக் கூத்தரும் கருநாடரும் வரிப் பாடல் பாடித் தொழுதல்#

‘வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!’ என,
கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்;
இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை,
கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு;
‘இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய,
அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார்
காதலர்’ என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்ற-

~குடகர் தம் மகளிருடன் கோலம் புனைந்து, வந்து வணங்குதல்#

‘கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்;
காலம் காணாய்; கடிது இடித்து உரறிக்
காரோ வந்தது! காதலர் ஏறிய
தேரோ வந்தது, செய்வினை முடித்து! என,
காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண்
கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற-

~ஏத்தாளர் தமரொடு வந்து மன்னவனை ஏத்துதல்#
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
‘வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி!’ என்று ஓவர் தோன்ற-

~தம்மைப் பணிந்த கூத்தர் முதலியோர்க்கு மன்னன் பரிசு அளித்தல்#

கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின்
ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி-

~சஞ்சயன் முதலியோர் திறைகளுடன் வந்தமையை வாயிலோன் தெரிவித்தல்#

‘நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை
நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞூறும்,
ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞூற்றுவரும்,
சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே!
வாயிலோர்’ என வாயில் வந்து இசைப்ப-

~மன்னவன் கட்டளைப்படி, சஞ்சயன் முதலியோர் அவன் முன் வருதல்#

‘நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இசைக் குலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு’ என-
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி,
ஆணையின் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு
மாண் வினையாளரை வகை பெறக் காட்டி-

~சஞ்சயன் த்த செய்தி#

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே!
“வட திசை மருங்கின் வானவன் பெயர்வது
கடவுள் எழுத ஓர் கற்கேஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம்” என்றனர்’ என்று,
‘வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க!’ என-

~செங்குட்டுவன் சஞ்சயனுக்கு இட்ட கட்டளை#

அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானைக் காவலன் க்கும்:
‘பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி,
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றக் கொண்டிச் சேனை செல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெரு நிரை செய்க- தாம்’ என,
சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள்,

~பாண்டியன் அனுப்பிய தூதுவர் வருதல்#

எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞூற்றுவர்;
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து;
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்
மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-

~செங்குட்டுவன் நீலகிரிப் பாடியை விட்டுச் சென்று, கங்கையைக் கடந்து, பகைப் புலத்தில் பாசறையில் வீற்றிருத்தல்#

வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து;
கங்கைப் பேரியாற்றுக் கன்னரின் பெற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ,
பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த
தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்-

~வடநாட்டு அரசர் சிலருடன் கூடி, கனக விசயர் எதிர்த்தல்#

உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்,
‘தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்’ என,
கலந்த கேண்மையின் கனக விசயர்
நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர-

~செங்குட்டுவன் பகைவர்மேல் படையொடு பொருதல்#

இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர்
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப;
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர்,
வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர;
சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர்,
கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர்,
வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர்,
மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள்,
களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய;
தாரும் தாரும் தாம் இடை மயங்க;
தோளும் தலையும் துணிந்து வேறாகிய
சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து,
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட;
பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட;
அரும் தேர்த் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து;
நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட;
‘எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை,
ஒரு பகல் எல்லையின், உண்ணும்’ என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய-

~கனக விசயர் சிறைப்படுதலும், வடவரின் படைகள் சிதறுதலும்#

வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு,
செங்குட்டுவன் – தன் சின வலைப் படுதலும்-
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர்,
பீடிகைப் பீலிப் பெரு நோன்பாளர்,
பாடு பாணியர், பல் இயத் தோளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய,தாம் துறைபோகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர-

~பேய்கள் கூத்து ஆடி, உண்டு, மகிழ்ந்து, வாழ்த்துதல்#

கச்சை யானைக் காவலர் நடுங்க,
கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக,
ஆள் அழி வாங்கி, அதரிதிரித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி,
முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன்
தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி;
பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை-
முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி,
தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், ‘செங்கோல் கொற்றத்து
அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க!’ என-

~செங்குட்டுவன் படை வீரரை அனுப்பி, இமயத்திலிருந்து கல் கொணர்ந்து, வடிவம் எழுதச் செய்தல்#

மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
‘வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை,
காற்றூதாளரை, போற்றிக் காமின்’ என,
வில்லவன்- கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானைப் படை பல ஏவி,
பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக்
கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என்.

&
செங்குட்டுவன் படைப்பெருக்கோடு வடநாடு நோக்கிச் சென்றான். எதிர்த்த ஆரிய மன்னர்கள் பலரையும் வென்றான். இமயத்திலே பத்தினிக்குக் கல்லும் தோண்டிக் கொண்டான்.

வஞ்சிக் காண்டம் $ காட்சிக் காதை

இலவந்தி வெள்ளி மாடத்தில் தன் தேவி இளங்கோவேண்மாளுடன் இருந்த செங்குட்டுவன் மலைவளம் காணச் சுற்றத்தோடு பெயர்தல்#

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி,
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,

~பேரியாற்றங்கரையில் தங்குதல்#

வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும்,இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட,
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-

~மலைப்பக்கத்தில் எழும் பல் வேறு ஓசைகளைக் கேட்டல்#

குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்,
தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும்,
பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-

~குறவர் மலைபடு பொருள்களுடன் வந்து, செங்குட்டுவனை வணங்குதல்#

அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது,
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்:
ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும்,
கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும்,
வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-

~மலைக் குறவர் சொல்லிய செய்தி
ஆங்கு,#

ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;
எந் நாட்டாள்கொல்? யார் மகள்கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!’ என-

~செங்குட்டுவனுடன் இருந்த சாத்தனார் த்த புதுமைகள்#

மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது க்கும்:
‘ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்;
வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
‘அம் சில் ஓதி! அறிக” எனப் பெயர்ந்து,
முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
“அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன்,
மயங்கினன்கொல்” என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
“மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல்,
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
“கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று” எனக் காட்டி, இறைக்கு ப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை’ என்று,
ஒழிவு இன்றி த்து, ‘ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்’ என-

~தென்னவனது மறைவை அறிந்த செங்குட்டுவன் வருந்தி த்தல்#

தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் ப்போன்:
‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற
செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது:
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து த்த
நல் நூல் புலவற்கு நன்கனம் த்து-

~செங்குட்டுவன் வேண்மாளிடம் வினாவுதல்
‘ஆங்கு,#

உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?’ என,
மன்னவன் ப்ப-

~பெருந்தேவியின் மறுமொழி
மா பெருந்தேவி,#
‘காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்’ என-

~அரசனது நோக்கத்தை அறிந்து அமைச்சர் கூறுதல்#

மாலை வெண்குடை மன்னவன் விரும்பி,
நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
‘ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும்,

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து’ என-
~செங்குட்டுவன் தனது கருத்தை வெளியிடுதல்#

‘பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;
புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை
நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு’ என,
‘குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்,
வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்’ என-

~வில்லவன் கோதை வேந்தனுக்கு த்தவை#

‘பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!’என,
வில்லவன்கோதை வேந்தற்கு க்கும்:
‘நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன;
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல்கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம்,
எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்:
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-

~அழும்பில் வேளின் கூற்று#

‘நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை’ என்றே அழும்பில் வேள் ப்ப-

~வஞ்சி மா நகர் திரும்பிய பின், வட திசை செல்வது
குறித்து, செங்குட்டுவன் பறை அறைவித்தல்#

நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்-
‘வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க’ என,
‘வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;
தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்!’ என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

&

சேர வேந்தனான செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றான். கண்ணகி வேங்கை மரத்தடியில் நின்றதும், தாம் கண்ட அதிசயமும் குன்றக் குறவர் அவனுக்குக் கூறினர். அப்போது அங்கே அவ்விடத்தே இருந்த சாத்தனார், கண்ணகி வழக்கு உரைத்ததும், மதுரை தீயுண்டதும் பற்றி அவர்கட்குக் கூறினார். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் நட்டு வழிபட எண்ணினான். வடநாட்டு வேந்தர் சிலரின் வீராப்பான பேச்சு இமயத்திற்கே செல்ல அவனைத் தூண்டியது பற்றிய அரசாணையும் எழுந்தது என்பது இது.

வஞ்சிக் காண்டம் $ குன்றக் குரவை

உரைப்ப் பாட்டு மடை குறவர் கண்ணகியை வினாவுதல்#

‘குருவி ஓப்பியும் கிளி கடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும்
அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின்,
வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்;
யாவிரோ?’ என-
~கண்ணகி த்த விடை#

முனியாதே,
‘மண மதுரையோடு அரசு கேடுற
வல் வினை வந்து உருத்தகாலை,
கணவனை அங்கு இழந்து போந்த
கடு வினையேன் யான்’ என்றாள்.

~கண்ணகி தன் கணவனுடன் வான ஊர்தியில் செல்லக் கண்ட குன்றக் குறவர்கள் அவளைத் தெய்வமாகக் கருதி, வழிபடுதல் #

என்றலும், இறைஞ்சி, அஞ்சி,
இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும்
நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப,
கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர்
இருந் தெய்வம் இல்லை; ஆதலின்,
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்-
ஒரு முலை இழந்த நங்கைக்கு,

பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே.
~கொளுச் சொல் #

ஆங்கு ஒன்று காணாய், அணி-இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.
ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
‘அஞ்சல் ஓம்பு’ என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே.

~தலைவன் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது #

பிஎற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.

என் ஒன்றும் காணோம் புலத்தல், அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.

~பாட்டு மடை#

இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி,
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் தோழி!

~வரைவு முடிதல் வேண்டித் தெய்வம் பராயது#

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே.
அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-

பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்

மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே.
சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே.

~தலைவி அறத்தொடு நிற்றல்#

‘இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, ‘வேலன், வருக’ என்றாள்!
ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்.
செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின்.
நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின்.

~தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது#

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்: வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே.
கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே.
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே.
குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே.

~தோழி தலைமகனுக்கு அலர் அறிவுறுத்தி, வரைவுகடாதல்#

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன்
சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது
நின்றேன் த்தது கேள்; வாழி, தோழி!
‘கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.’

~தலைமகளுக்குத் தோழி வரைவு கூறுதல்#

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் ப்பக் கேட்டு,
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம்.
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே.
பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் யோ ஒழியாரே.
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரி்கையே:
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே.
மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொன் தொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர்.

~சேரனை வாழ்த்துதல்#

என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே!

&

திருச்செங்குன்றினைச் சேர்ந்த கண்ணகியாள், மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே சென்று நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, கோவலன் இறந்ததன்பின் பதினான்கு நாட்கள் கழிந்திருந்தன. வானுலகத்திலிருந்து தேவருடன் அவர் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது!அதனால், அவனைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழி பட்டுப் பணிந்து போற்றலாயினர்.

மதுரைக் காண்டம் $ கட்டுரைக் காதை

 

 

மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல் #

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி;
கடை எயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி;
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும்,
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்;
இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்;
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால்
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்; பனித் துறைக்
கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொன்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி ஆதலின், அலமந்து:
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றி,
‘கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை’ என-

~
கண்ணகியின் வினா #

வாட்டிய திரு முகம் வலவயின் கோட்டி,
‘யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?’ என-

~
மதுராபதி சொல்லிய செய்திகள் தீவினை வந்த வகையைக் கூறுதல் #

‘ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்;
கட்டுரை ஆட்டியேன்; யான் நின் கணவற்குப்
பட்ட கவற்சியேன்; பைந்தொடி! கேட்டி:
பெருந்தகைப் பெண்! ஒன்று கேளாய், என் நெஞ்சம்
வருந்திப் புலம்புறு நோய்.
தோழி! நீ ஈது ஒன்று கேட்டி, எம் கோமகற்கு
ஊழ்வினை வந்தக்கடை
மாதராய்! ஈது ஒன்று கேள், உன் கணவற்குத்
தீதுற வந்த வினை. காதின்

~
பாண்டியர் குலத்தின் இயல்பு த்தல் #

மறை நா ஓசை அல்லது, யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே;
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன்:
இன்னும் கேட்டி; நல் நுதல் மடந்தையர்
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு,
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப்படாஅது
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்,
ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக் குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கம் தாராது. இதுவும் கேட்டி:

~
கை குறைத்த கொற்றவன் #

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
“அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்” என மொழிந்து,
மன்றத்து இருத்திச் சென்றீர்: அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ?, என,
செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை:

~
வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு பராசுரன் சேரனைக் காணச் சென்று, பார்ப்பனவாகை சூடி, மீளுதல் #

இன்னும் கேட்டி, நன் வாய் ஆகுதல்:
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை
திரு நிலைபெற்ற பெருநாள்-இருக்கை,
அறன் அறி செங்கோல், மற நெறி நெடு வாள்,
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்,
பூம் புனல் பழனப் புகார் நகர் வேந்தன்,
தாங்கா விளையுள், நல் நாடு-அதனுள்,
வலவைப் பார்ப்பான், பராசரன் என்போன்,
குலவு வேல் சேரன் கொடைத் திறம் கேட்டு,
“வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு” என,
காடும், நாடும், ஊரும், போகி,
நீடு நிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு,
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி,
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும்
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க
நா வலம் கொண்டு, நண்ணார் ஓட்டி,
பார்ப்பன வாகை சூடி, ஏற்புற
நன் நலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன்-

~

திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை #

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே: அவ் ஊர்ப்
பாசிலை பொதுளிய போதி மன்றத்து;
தண்டே, குண்டிகை, வெண்குடை, காட்டம்,
பண்டச் சிறு பொதி, பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன்; “காவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி!
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந் தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!” என;
குழலும், குடுமியும், மழலைச் செவ் வாய்,
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி,
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர;
“குண்டப் பார்ப்பீர்! என்னோடு ஓதி, என்
பண்டச் சிறு பொதி கொண்டு போமின்” என;
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்,
ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்,
பால் நாறு செவ் வாய்ப் படியோர் முன்னர்,
தளர் நா ஆயினும், மறைவிளி வழா அது,
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத,
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து,
முத்தப் பூணூல், அத்தகு புனை கலம்,
கடகம், தோட்டொடு கையுறை ஈத்து,
தன் பதிப் பெயர்ந்தனனாக- நன் கலன்

~
வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை #

புனைபவும் பூண்பவும் பொறாஅராகி,
வார்த்திகன்-தன்னைக் காத்தனர் ஓம்பி,
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றி,
“படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன்” என,
இடு சிறைக் கோட்டத்து இட்டனராக,
வார்த்திகன் மனைவி, கார்த்திகை என்போள்,
அலந்தனள்; ஏங்கி அழுதனள், நிலத்தில்;
புலந்தனள்; புரண்டனள்; பொங்கினள்; அது கண்டு,
மை அறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவாது ஆகலின்,

~
வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல் #

திறவாது அடைந்த திண் நிலைக் கதவம்
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி
“கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீமின்” என,
ஏவல் இளையவர் காவலன் தொழுது,
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி ப்ப,
“நீர்த்து அன்று இது” என நெடுமொழி கூறி,
“அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என்
இறை முறை பிழைத்தது: பொறுத்தல் நும் கடன்” என,
தடம் புனல் கழனித் தங்கால்-தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கி
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்,
இரு நில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி, அவள்
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே;
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின்
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப,
கலை அமர் செல்வி கதவம் திறந்தது:
“சிறைப்படு கோட்டம் சீமின், யாவதும்
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்மின்;
இடு பொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்,
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்” என
யானை எருத்தத்து, அணி முரசு இரீஇ,
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான் முறை பிழைத்த தகுதியும் கேள், நீ:

~

சோதிட வார்த்தை #

“ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண,
சால் மதுரையோடு அரைசு கேடுறும்” எனும்
யும் உண்டே, நிரை தொடியோயே!-

~
பாண்டியன் முறை பிழைத்த காரணம் கோவலனது முற்பிறப்பு வரலாறு #

கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு,
வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
தீம் புனல் பழனச் சிங்கபுரத்தினும்,
காம்பு எழு கானக் கபிலபுரத்தினும்,
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற,
இரு-முக் காவதத்து இடைநிலத்து யாங்கணும்,
செரு வெல் வென்றியின், செல்வோர் இன்மையின்,
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து,
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு,
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன்; அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்-
“ஒற்றன் இவன்” எனப் பற்றினன் கொண்டு,
வெற்றி வேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி;
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களம் காணாள், நீலி என்போள்,
“அரசர், முறையோ? பரதர், முறையோ?”
ஊரீர், முறையோ? சேரியீர் முறையோ?” என,
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு:
எழு நாள் இரட்டி எல்லை சென்றபின்,
“தொழு நாள் இது” எனத் தோன்ற வாழ்த்தி,
மலைத் தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில்
கொலைத் தலைமகனைக் கூடுபு நின்றோள்,
“எம் உறு துயரம் செய்தோர் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக” என்றே
விழுவோள் இட்ட வழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள் நீ:

~
மதுராபதியின் கட்டுரை #

உம்மை வினை வந்து உருத்தகாலை,
செம்மையிலோர்க்குச் செய் தவம் உதவாது:
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன் – தன்னை
ஈர்-ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை,
ஈனோர் வடிவில் காண்டல் இல்’ என,
மதுரை மா தெய்வம் மா பத்தினி்க்கு
விதி முறை சொல்லி, அழல்வீடு கொண்டபின்-

~
கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, திருச்செங்கோடு சேர்தல் #

‘கருத்து உறு கணவன் கண்டபின் அல்லது,
இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலன்’ என,
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து,
‘கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்;
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு’ என,
இரவும் பகலும் மயங்கினள் கையற்று.
உரவு நீர் வையை ஒரு கரைக் கொண்டு, ஆங்கு,
அவல என்னாள், அவலித்து இழிதலின்,
மிசைய என்னாள், மிசை வைத்து ஏறலின்;
கடல் வயிறு கிழித்து, மலை நெஞ்சு பிளந்து, ஆங்கு,
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி-

~
கண்ணகி கோவலனோடு வான ஊர்தியில் செல்லுதல் #

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ், ‘ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான்’ என்று ஏங்கி.
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
‘தொழு நாள் இது’ எனத் தோன்ற வாழ்த்தி,
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி,
வாடா மா மலர் மாரி பெய்து, ஆங்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த,
கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ-
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான்-என்.

~வெண்பா #

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

~கட்டுரை #

முடி கெழு வேந்தர் மூவருள்ளும்
படை விளங்கு தடக் கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்,
ஆரபடி, சாத்துவதி என்று இரு விருத்தியும்,
நேரத் தோன்றும் வரியும் குரவையும்
வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காண,
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று.

&

 

மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னால் தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும், கோவலன் செய்த பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள்.

இத்துடன் மதுரைக் காண்டம் முற்றுப்பெற்றது.

மதுரைக் காண்டம் $ அழற்படு காதை

 

 

மன்னவன் மாண்டதை அறியாமல், அவையோர் அசைவற்றிருத்தல்#

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது;
காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன;
அரைசர் பெருமான், அடு போர்ச் செழியன்
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து, ஆங்கு,
இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட,
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசுக்கட்டிலில் துஞ்சியது அறியாது;
ஆசான், பெருங்கணி, அறக்களத்து அந்தணர்,
காவிதி, மந்திரக்கணக்கர்-தம்மொடு,
கோயில் மாக்களும், குறுந் தொடி மகளிரும்,
ஓவியச் சுற்றத்து அவிந்து இருப்ப-

~மன்னவன் கோயிலில் தீயைக்கண்டு, காவலர் முதலியோர் நீங்குதல்#

காழோர், வாதுவர், கடுந் தேர் ஊருநர்,
வாய் வாள் மறவர், மயங்கினர் மலிந்து,
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு, தாம் விடைகொள்ள-

~பிராமண பூதம்#

நித்திலப் பைம் பூண் நிலாத் திகழ் அவிர் ஒளி,
தண் கதிர் மதியத்தன்ன மேனியன்;
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து,
வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி, என்று
இன்னவை முடித்த நல் நிறச் சென்னியன்;
நுரை என விரிந்த நுண் பூங் கலிங்கம்
புலராது உடுத்த உடையினன்; மலரா
வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம்,
கொட்டமோடு அரைத்துக் கொண்ட மார்பினன்;
தேனும், பாலும், கட்டியும், பெட்பச்
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன்;
தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும்,
ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று,
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்;
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன்;
விரி குடை, தண்டே, குண்டிகை, காட்டம்,
பிரியாத் தருப்பை, பிடித்த கையினன்;
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்;
முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ,
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு,
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்-

~அரச பூதம் #

(வென்றி வெங் கதிர் புரையும் மேனியன்;
குன்றா மணி புனை பூணினன்; பூணொடு
முடிமுதல் கலன்கள் பூண்டனன்; முடியொடு
சண்பகம், கருவிளை, செங் கூதாளம்,
தண் கமழ் பூ நீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்,
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்;
அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணம் கொண்ட மார்பினன்;
பொங்கு ஒளி அரத்தப் பூம் பட்டு உடையினன்;
முகிழ்த்த கைச்
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி,
ஏலும் நல் சுவை இயல்புளிக் கொணர்ந்து,
வெம்மையின் கொள்ளும் மடையினன்; செம்மையின்)
பவளச் செஞ் சுடர் திகழ் ஒளி மேனியன்;
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்,
முரைசொடு வெண்குடை, கவரி, நெடுங் கொடி,
சால் அங்குசம், வடி வேல், வடிகயிறு,
என இவை பிடித்த கையினன் ஆகி,
எண்-அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி,
மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
கொடுந் தொழில் கடிந்து, கொற்றம் கொண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
சால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்-

வணிக பூதம்

செந் நிறப் பசும் பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்;
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி,
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்;
( சால் பொன் நிறம் கொண்ட உடையினன்;
வெட்சி, தாழை, கள் கமழ் ஆம்பல்,
சேடல், நெய்தல், பூளை, மருதம்,
கூட முடித்த சென்னியன்; நீடு ஒளிப்
பொன் என விரிந்த நல் நிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்:
கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ,
‘கொள்’ எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு
நெல் உடைக் களனே, புள் உடைக் கழனி,
வாணிகப் பீடிகை, நீள் நிழல் காஞ்சி,
பாணி கைக்கொண்டு, முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே; அவனே
நாஞ்சில் அம் படையும், வாய்ந்து உறை துலா முன்
சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விளைந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து,
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,)
உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக்
கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பெரும் கடவுளும்-

வேளாண் பூதம்

(கருவிளை புரையும் மேனியன்; அரியொடு
வெள்ளி புனைந்த பூணினன்; தெள் ஒளிக்
காழகம் செறிந்த உடையினன்; காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய
கோட்டினும், கொடியினும், நீரினும், நிலத்தினும்,
காட்டிய பூவின் கலந்த பித்தையன்;
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்தி,
செம்மையின் வரூஉம் சிறப்புப் பொருந்தி,)
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்;
ஒண் நிறக் காழகம் சேர்ந்த உடையினன்;
ஆடற்கு அமைந்த அவற்றோடு பொருந்தி,
பாடற்கு அமைந்த பல துறை போகி,
கலி கெழு கூடல் பலி பெறு பூதத்
தலைவன் என்போன்-தானும்-தோன்றி,

~நால் வகை வருண பூதமும் நீங்குதல்#

கோமுறை பிழைத்த நாளில், இந் நகர்
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின்,
யாம் முறை போவது இயல்பு அன்றோ?’ என,
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நால் பால் பூதமும் பால்பால் பெயர-

~மறவோர் சேரியில் எரி பரவுதல் #

கூல மறுகும், கொடித் தேர் வீதியும்,
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
[உரக் குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன்]
கா எரிஊட்டிய நாள் போல் கலங்க,
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட-

~நெருப்பினால் நேர்ந்த துன்பம்
மிருகங்களின் நிலை#
கறவையும் கன்றும், கனல் எரி சேரா,
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன;
மற வெங் களிறும், மடப் பிடி நிரைகளும்,
விரை பரிக் குதிரையும், புறமதில் பெயர்ந்தன:

மடந்தையரின் நிலை

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
மைத் தடங் கண்ணார், மைந்தர்-தம்முடன்,
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை
நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித்
துறு மலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங் காழ் ஆரம், பரிந்தன பரந்த
தூ மென் சேக்கை, துனிப் பதம் பாராக்
காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க:

~குழந்தைகளுடன் மகளிர் வெளியேறுதல் #
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர்
குதலைச் செவ் வாய்க் குறு நடைப் புதல்வரொடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி,
வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத:

~இல்லறம் வழுவாத மகளிர#

வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டாப்
பெரு மனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி,
‘இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து,
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்று’ என,
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்:

~நாடக மடந்தையர் #

எண்-நான்கு இரட்டி இருங் கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி,
தண்ணுமை, முழவம், தாழ்தரு தீம் குழல்,
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு,
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
‘எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
இந் நாட்டு இவ் ஊர் இறைவனை இழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்று, இவ்
ஊர் தீ ஊட்டிய ஒரு மகள்’ என்ன-

~நித்திய கருமம் நடைபெறாதொழிதல்#

அந்தி விழவும், ஆரண ஓதையும்,
செந் தீ வேட்டலும், தெய்வம் பரவலும்.
மனை விளக்குறுத்தலும், மாலை அயர்தலும்,
வழங்கு குரல் முரசமும், மடிந்த மா நகர்-

~கண்ணகியின் முன் மதுராபதி தெய்வம் தோன்றுதல்#

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனள்; உயிர்த்து,
மறுகிடை மறுகும், கவலையில் கவலும்,
இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்,
ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன்,
கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி-என்.

~வெண்பா #
மாமகளும், நாமகளும், மா மயிடன் செற்று உகந்த
கோமகளும், தாம் படைத்த கொற்றத்தாள்; நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்-
மதுராபதி என்னும் மாது.

&

தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான ‘மதுரபதி’ என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள்.

 

&

 

தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான ‘மதுரபதி’ என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள்.

மதுரைக் காண்டம் $ வஞ்சின மாலை

கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுத#
‘கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரிய இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய-காண்:

~கற்புடை மங்கையர் எழுவர் வரலாறு நல் பகலே,#

வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக
முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்; பொன்னிக்
கரையில், “மணல் பாவை நின் கணவன் ஆம்” என்று,
செய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர்; சான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்-
தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின் பின் சென்று,
“கல் நவில் தோளாயோ!” என்ன, கடல் வந்து,
முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக்கொண்டு,
பொன் அம் கொடி போலப் போதந்தாள்; மன்னி,
மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி,
கணவன் வரக் கல் உருவம் நீத்தாள்; இணை ஆய
மாற்றாள் குழவி விழ, தன் குழவியும் கிணற்று
வீழ்த்து, ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள்; வேற்றொருவன்
நீள் நோக்கம் கண்டு, “நிறை மதி வாள் முகத்தைத்
தான் ஓர் குரக்கு முகம் ஆக!” என்று, போன
கொழுநன் வரவே, குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை; “விழுமிய,
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று த்த
நுண் அறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண் இலேன்,
வண்டல் அயர்விடத்து, யான் ஓர் மகள் பெற்றால்,
ஒண்-தொடி! நீ ஓர் மகன் பெறின், கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று, யான் த்த மாற்றம்
கெழுமியவள் ப்பக் கேட்ட விழுமத்தான்
சிந்தை நோய் கூரும், திருவிலேற்கு” என்று எடுத்து,
தந்தைக்குத் தாய் ப்பக் கேட்டாளாய், முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தலையை வணங்கி, தலை சுமந்த
ஆடகப் பூம் பாவை-அவள்; போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்;

#அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கண்ணகி கூறி, நீங்குதல்#
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ என்னா, விட்டு அகலா-

#கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து, மதுரையின்மீது எறிதல்#

‘நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-

#கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ எழல்#

‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய
பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே-
நல் தேரான் கூடல் நகர்.

#வெண்பா#
பொற்பு வழுதியும், தன் பூவையரும், மாளிகையும்,
வில் பொலியும் சேனையும், மா வேழமும், கற்பு உண்ண;
தீத் தரு வெங் கூடல் தெய்வக் கடவுளரும்
மாத்துவத்தான் மறைந்தார் மற்று.

&

பாண்டியன் உயிர்விட்ட அக்காட்சி கண்ணகியைத் திகைப்படையச் செய்தது. கோப்பெருந்தேவியது கற்பின் செவ்வி அவளைப் பெரிதும் வியப்படையவும் செய்தது. எனவே, தானும் கற்புடை மகளிர் பலர் பிறந்த நகரிலே பிறந்தவள் என்றும், பத்தினியே என்றும், அரசோடு மட்டும் அமையாது மதுரை நகரினையும் அழிப்பேனென்றும் வஞ்சினம் கூறிச் சென்று, தீக்கடவுளையும் மதுரை மீது ஏவுகின்றாள்.

மதுரைக் காண்டம் $ வழக்குரை காதை

கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல#

ஆங்கு,
‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’

கருப்பம
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் த்தும்’ என-

~கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை
அரசவையில் இருந்த மன்னனுக்கு த்தல்#

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் ப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,

~கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல#

‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-

~கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்#

வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

~மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்#

‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-

~பாண்டியன் வினா#
‘நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என-

~கண்ணகியின் மறுமொழி#

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!

~மன்னவன் த்த விடை#

கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,

~கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்#
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-

~மன்னவன் தனது தேவியின் சிலம்பில் உள்ள அரி முத்து எனக் கூறி,
காவலர் கொணர்ந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்#

‘தேமொழி! த்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-

~கண்ணகி சிலம்பை உடைக்க, மன்னவன் முகத்தில் மணி தெறித்தல்#
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,

~மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்#

தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்

~கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்#

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

வெண்பா
‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண்.
காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினான்.
மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்

கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர்.

&

கண்ணகி அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி ” நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?” என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, “ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர்” என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம் “கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி “அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது”என்றாள்.

அதற்கு அரசன் “நீ கூறியது, நல்லதே!எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே” என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்” என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்

மதுரைக் காண்டம் $ ஊர்சூழ் வரி

கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல#

என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:
‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:
பட்டேன், படாத துயரம், படுகாலை;
உற்றேன், உறாதது; உறுவனே? ஈது ஒன்று:
கள்வனோ அல்லன் கணவன்; என் கால் சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே! ஈது ஒன்று:
மாதர்த் தகைய மடவார்கள் முன்னரே,
காதல் கணவனைக் காண்பனே, ஈது ஒன்று:
காதல் கணவனைக் கண்டால், அவன் வாயில்
தீது அறு நல் கேட்பனே; ஈது ஒன்று:
தீது அறு நல் கேளாதொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்; இது ஒன்று’-என்று
அல்லல் உற்று, ஆற்றாது, அழுவாளைக் கண்டு, ஏங்கி,
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி-

~மதுரை மக்கள் கண்ணகியின் அவல நிலைக்கு இரங்கிக் கூறுதல்#

‘களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி,
வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்?
மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்தது! இது என்கொல்?
மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை
தண் குடை வெம்மை விளைத்தது! இது என்கொல்?
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம்பொருட்டால்,
வம்பப் பெரும் தெய்வம் வந்தது! இது என்கொல்?
ஐ அரி உண் கண் அழுது, ஏங்கி, அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்! இது என்கொல்?’-
என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும்
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை-
கம்பலை மாக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட,
மாலைப் பொழுதில் கண்ணகி தன் கணவனைக் காணுதல்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட,
செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான்.
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி, மா மலைமேல்,
செவ்வென் கதிர் சுருங்கி, செங் கதிரோன் சென்று ஒளிப்ப,
புல்லென் மருள் மாலைப் பூங் கொடியாள் பூசலிட,
ஒல்லென் ஒலி படைத்தது ஊர்.

~கண்ணகி சோகமுற்று அரற்றி அழுதல்#

வண்டு ஆர் இருங் குஞ்சி மாலை தன் வார் குழல்மேல்
கொண்டாள், தழீஇ, கொழுநன்பால், காலைவாய்;
புண் தாழ் குருதி புறம் சோர, மாலைவாய்,
கண்டாள், அவன் தன்னைக் காணாக் கடுந் துயரம்!
‘என் உறு துயர் கண்டும், “இடர் உறும் இவள்” என்னீர்!
பொன் உறு நறு மேனி பொடி ஆடிக் கிடப்பதோ?
மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு,
“என் உறு வினை காண்; ஆ! இது” என யாரோ?
யாரும் இல் மருள் மாலை, இடர் உறு தமியேன் முன்,
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ?
பார் மிகு பழி தூற்ற, பாண்டியன் தவறு இழைப்ப,
“ஈர்வது ஓர் வினை காண்; ஆ! இது” என யாரோ?
ண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன்முன்,
புண் பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக் கிடப்பதோ?
மன்பதை பழி தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
“உண்பதோர் வினை காண்; ஆ! இது” என யாரோ?
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’-

~கண்ணகி கோவலனைத் தழுவுதலும், அவன் உயிர்பெற்று எழுந்து பேசுதலும்#

என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்
பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள,
நின்றான், எழுந்து: “நிறை மதி வாள் முகம்
கன்றியது!” என்று, அவள் கண்ணீர் கையான் மாற்ற-
~தன் பாதத்தைக் கண்ணகி பற்ற, கோவலன் வானுலகு செல்லுதல்#

அழுது ஏங்கி, நிலத்தின் வீழ்ந்து, ஆய் இழையாள் தன் கணவன்
தொழுதகைய திருந்து அடியைத் துணை வளைக் கையான் பற்ற,
பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான்,
‘எழுது எழில் மலர் உண் கண்! இருந்தைக்க’ எனப் போனான்.

~கண்ணகியின் சிந்தனை#

மாயம் கொல்? மற்று என்கொல்? மருட்டியதோர் தெய்வம்கொல்?
போய் எங்கு நாடுகேன்? பொருள் யோ இது அன்று;
காய் சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்;
தீ வேந்தன்-தனைக் கண்டு, இத் திறம் கேட்பல் யான்’ என்றாள்-

~கண்ணகி சினத்துடன் பாண்டியனது கோயிலின் முன் செல்லுதல்#

என்றாள் எழுந்தாள்; இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள், நெடுங் கயல் கண் நீர் சோர;
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையாச்
சென்றாள், அரசன் செழுங் கோயில் வாயில் முன்.

&

எழுந்து ஒலித்த அக்குரலை அனைவருமே கேட்டனர். கண்ணகியும், தன்பாலிருந்த மற்றொரு சிலம்பினைத் தன் கையிலே எடுத்துக் கொண்டவளாகத், தன் கணவனின் உடலினை காணப் புறப்பட்டாள். அவன் கிடந்த நிலையைக் கண்டு அரற்றினாள். அவன் வாய் திறந்து பேசவும் கேட்டாள். குலமகளாகப் பொறுமையின் வடிவமாகத் துயரங்களைத் தாங்கி அமைதியோடிருந்தவள், கொதித்துப் பலரும் அஞ்சி ஒதுங்க, வம்பப் பெருந்தெய்வம்போல ஆவேசித்து, மன்னன் அரண்மனை நோக்கி அறம் கேட்கப் போகும் நிலையையும் காண்கின்றோம். இந்த நிலைமாற்றம் பெண்மையின் தெய்வீகப் பேரியல்பு என்றும் உணர்கின்றோம்

மதுரைக் காண்டம் $ துன்ப மாலை

கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல#

ஆங்கு,
ஆயர் முதுமகள், ஆடிய சாயலாள்,
பூவும், புகையும், புனை சாந்தும், கண்ணியும்,
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த,
தூவி, துறைபடியப் போயினாள், மேவிக்
குரவை முடிவில்-ஓர் ஊர் அரவம் கேட்டு,
விரைவொடு வந்தாள் உளள்.
~கொலைச் செய்தி அறிந்து வந்த ஆய்மகள் பேசாது நிற்க, கண்ணகி அவளை நோக்கி ஐயுற்றுப் பேசுதல்#

அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்
‘எல்லா! ஓ!-
காதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்,
ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின்,
மன்பதை சொன்னது எவன்? வாழியோ, தோழீ!
தஞ்சமோ! தோழீ! தலைவன் வரக் காணேன்;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு-அன்றே;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு ஆயின்,
எஞ்சலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!’

~ஆய்மகள் உண்மை த்தல#

சொன்னது:
‘அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே.
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே,
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே!’

~கண்ணகியின் துயர நிலை#

எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள்; விழுந்தாள், பொழி கதிர்த்
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென;
செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை,
‘எங்கணாஅ!’ என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்;
‘இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க,
துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல்,
மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி,
துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல்,
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப,
அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க,
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல்,
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப,
இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ?’

~ஆய்ச்சியர் முன்னிலையில் கண்ணகி கதிரவனை விளித்து, ‘என் கணவன் கள்வனோ?’ என வினவுதல#

காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;
பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,
காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-

~அசரீரி வாக்கு#
‘கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!
ஒள் எரி உண்ணும், இவ் ஊர்’ என்றது ஒரு குரல்.

&

குரவையின் முடிவிலே, மாதரி வைகையிலே நீராடிவிட்டுவரப் போயினாள். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுக் கண்ணகி புலம்பினாள். இப்பகுதியில் கண்ணகியின் அவல மிகுதியைக் காண்கின்றோம். அவள் காய்கதிர்ச் செல்வனை விளித்துக் கேட்டாள். “நின் கணவன் கள்வனல்லன்; இவ்வூரினைப் பெருந்தீ உண்ணப்போகின்றது” என்ற குரல் ஒன்று எழுந்தது.

மதுரைக் காண்டம் $ ஆய்ச்சியர் குரவை

கயிறும் மத்தும் கொண்டு, மாதரி தயிர் கடைய முற்படுதல்#

‘கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவல் அம் தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்ப, பார் அரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின்,
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று,
ஐயை தன் மகளைக் கூஉய்,
கடை கயிறும் மத்தும் கொண்டு,
இடை முதுமகள் வந்து தோன்றும்-மன்.

~ ப் பாட்டு மடை
மாதரி கண்ட உற்பாதங்கள்#

குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின்
மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு!
உறி நறு வெண்ணெய் உருகா; உருகும்
மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு!
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்;
மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு!

~கருப்பம்#
‘குடத்துப் பால் உறையாமையும்,
குவி இமில் ஏற்றின்
மடக் கண் நீர் சோர்தலும்
உறியில் வெண்ணெய் உருகாமையும்,
மறி முடங்கி ஆடாமையும்,
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும்,
வருவது ஓர் துன்பம் உண்டு’ என,
மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும்-தான் காண,
ஆயர் பாடியில், எரு மன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
வால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்’ என்றாள்-
‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே,’

~கொளு#

‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்
வேரி மலர்க் கோதையாள்; சுட்டு,

நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள்.

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல்-தான்.

நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர்-தன் தோள்.

பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந்
நன் கொடி மென்முலை-தான்.

வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள்.

தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள்.

~எடுத்துக்காட்டு#
ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்,-
என்று, தன் மகளை நோக்கி,
தொன்று படு முறையான் நிறுத்தி,
இடை முதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.

~படைத்துக் கோள் பெயர்#
மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை-
ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.
மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்,
முத்தைக்கு நல் விளரி-தான்
அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
‘ஐ!’ என்றாள், ஆயர் மகள்,

~கூத்து உள்படுதல்#
அவர்-தாம்
செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக்
குரல்-கொடி தன் கிளையை நோக்கி, ‘பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும்,
முல்லைத் தீம் பாணி’ என்றாள்.
எனா,
குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக,
வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா
மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின்
பின்றையைப் பாட்டு எடுப்பாள்.

~பாட்டு
மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்#

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

~பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்#
தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை-
அணி நிறம் பாடுகேம் யாம்.

இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்?

வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்?

தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்?

~ஒன்றன் பகுதி#
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்,
மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார்
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார்.

மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்,
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை: சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார்

~ஆடுநர்ப் புகழ்தல்#
மாயவன் தம்முன்னினொடும், வரிவளைக் கைப் பின்னையொடும்,
கோவலர் – தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம்சோர,
ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த,
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே.
எல்லாம் நாம்,
புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்-
உள்வரிப் பாணி ஒன்று உற்று.

~உள்வரி வாழ்த்து
பூவை நிலை#

கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே:
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால்.

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்:
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால்,

முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான்,
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்:
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால்.

~முன்னிலைப் பரவல்#
வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே:
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை:
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே!
‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே:
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்:
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி;
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே!

~படர்க்கைப் பரவல்#
மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?

பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?

மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?

~வாழ்த்து#
என்று, யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர்
மருள, வைகல் வைகல் மாறு அட்டு,
வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே!

&
ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. ஏற்றின் அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.

மதுரைக் காண்டம் $ கொலைக்களக் காதை

மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்த்து, அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு, ஏற்றவர்களை நியமித்தல்#

அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடைக் குல மடந்தை
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி,
பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க்
காவல் சிற்றில் கடி மனைப் படுத்து;
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி,
நறு மலர்க் கோதையை நாள்-நீர் ஆட்டி:
‘கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடகப் பைம் பூண் அரு விலை அழிப்ப,
செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு என் மகள்
ஐயை, காணீர், அடித்தொழில் ஆட்டி;
பொன்னின் பொதிந்தேன், புனை பூங் கோதை!
என்னுடன் நங்கை, ஈங்கு இருக்க’ எனத் தொழுது,
‘மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி,
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;
நோதகவு உண்டோ, நும் மகனார்க்கு இனி?-
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்
நெடியாது அளிமின், நீர்’ எனக் கூற-

~இடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள்#

இடைக்குல மடந்தையர், இயல்பின் குன்றா
மடைக்கலம்-தன்னொடு மாண்பு உடை மரபின்
கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய்,
வாள் வரிக் கொடுங் காய், மாதுளம் பசுங் காய்,
மாவின் கனியொடு வாழைத் தீம் கனி,
சாலி அரிசி, தம் பால் பயனொடு,
‘கோல் வளை மாதே! கொள்க’ எனக் கொடுப்ப-

~ஐயையின் உதவியுடன் கண்ணகி அமுது ஆக்கல்#

மெல் விரல் சிவப்ப, பல்வேறு பசுங் காய்
கொடு வாய்க் குயத்து விடுவாய்செய்ய,
திரு முகம் வியர்த்தது; செங் கண் சேந்தன;
கரி புற அட்டில் கண்டனள் பெயர,
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி-

~கோவலனுக்குக் கண்ணகி உணவு படைத்தல்#

தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக்
கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,
தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து-

~ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல்#

‘ஆங்கு, ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ,
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக்கொல்!’ என;
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி,
‘கண் கொளா நமக்கு, இவர் காட்சி, ஈங்கு’ என-

~கோவலன் கண்ணகியை நோக்கி, கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல்#

உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த
மை ஈர் ஓதியை, ‘வருக’ எனப் பொருந்தி,
“கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுநகொல்லோ மடந்தை மெல் அடி!” என,
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி,
எம் முதுகுரவர் என் உற்றனர்கொல்?
மாயம் கொல்லோ, வல் வினைகொல்லோ?
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்:
வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறு மொழிக் கோட்டி, நெடு நகை புக்கு,
பொச்சாப்புண்டு, பொருள் யாளர்
நச்சுக் கொன்றேற்கு நல் நெறி உண்டோ?
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்;
சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;
வழு எனும் பாரேன்; மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய்; என் செய்தனை!’ என-

~கண்ணகியின் பணிவுரை#

‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த,
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற-

~கோவலன் கண்ணகியைப் பாராட்டி, ஒரு சிலம்பை எடுத்துச் சென்று விற்று வருவேன்’ என்று கூறி, விடைபெற்றுச் செல்லுதல்#

‘குடி முதல் சுற்றமும், குற்றிளையோரும்;
அடியோர் பாங்கும், ஆயமும், நீங்கி;
நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்,
பேணிய கற்பும், பெரும் துணை ஆக;
என்னொடு போந்து, ஈங்கு என் துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனை பூங் கோதாய்,
நாணின் பாவாய், நீள் நில விளக்கே,
கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு, யான் போய்,
மாறி வருவன்; மயங்கா தொழிக’ என-
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னை
ஒருங்குடன் தழீஇ, உழையோர் இல்லா
ஒரு தனி கண்டு, தன் உள் அகம் வெதும்பி,
வரு பனி கரந்த கண்ணன் ஆகி,
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி,
வல்லா நடையின் மறுகில் செல்வோன்.

~தீய நிமித்தம்#

இமில் ஏறு எதிர்ந்தது, இழுக்கு என அறியான்,
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்-

~கடைத்தெருவில் பொற்கொல்லனைக் கண்டு, கோவலன் வினாவுதல்#

தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து,
மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவில் பெயர்வோன்-ஆங்கண்,
கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின் வர,
மெய்ப்பை புக்கு, விலங்கு நடைச் செலவின்
கைக் கோல் கொல்லனைக் கண்டனனாகி,
‘தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன் வினைக் கொல்லன் இவன்’ எனப் பொருந்தி,
‘காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ?’ என-

~பொற்கொல்லன் த்த விடை#

‘அடியேன் அறியேன் ஆயினும், வேந்தர்
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான்’ என,
கூற்றத் தூதன் கைதொழுது ஏத்த-
~கோவலன் சிலம்பைக் காட்ட, பொற்கொல்லன் அதன் தகுதி பற்றிக் கூறுதல்#

போற்று-அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்:
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும் பொன் குடைச் சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி,
‘கோப்பெருந்தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை’ என- ‘முன்போந்து,

~வேந்தனுக்குச் சிலம்பு பற்றித் தெரிவித்து வருமளவும் தன் குடிலில் தங்கியிருக்க என்று பொற்கொல்லன் சொல்ல, கோவலன் அதன் அயலில் உள்ள தேவ கோட்டத்தின் மதில் புறத்துச் செல்லுதல்#

விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர, என்
சிறு குடில் அங்கண் இருமின் நீர்’ என,
கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை ஓர்
தேவ கோட்டச் சிறைஅகம் புக்கபின்-

~பொற்கொல்லன் தீய எண்ணத்துடன் செல்லுதல்#

‘கரந்து யான் கொண்ட கால்-அணி ஈங்கு,
பரந்து வெளிப்படாமுன்னம் மன்னற்கு,
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான்’ என,
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்-

~கோப்பெருந்தேவியின் கோயிலை நோக்கி மன்னவன் செல்லுதல்#

‘கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்,
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து,
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,
குலமுதல் தேவி கூடாது ஏக,
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன்
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி,
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்-
மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல்

வீழ்ந்தனன் கிடந்து, தாழ்ந்து, பல ஏத்தி,
‘கன்னகம் இன்றியும், கவைக்கோல் இன்றியும்,
துன்னிய மந்திரம் துணை எனக் கொண்டு,
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து,
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேர் ஊர்க் காவலர்க் கரந்து, என்
சில்லைச் சிறு குடில் அகத்து இருந்தோன்’ என-

~மன்னவன் வினைவசத்தால் மயங்கி, காவலர்க்கு இட்ட கட்டளை#

வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர் காப்பாளரைக் கூவி, ‘ஈங்கு என்
தாழ் பூங் கோதை-தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையதுஆகின்,
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ என,

~கோவலனிடம் காவலாளருடன் மீண்ட பொற்கொல்லன் ‘இவர் சிலம்பு காண வந்தோர்’ என்று, சிலம்பைப் பற்றிக் கூறுதல்#

காவலன் ஏவ- கருந் தொழில் கொல்லனும்,
‘ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து’ என,
தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
கோவலன்-தன்னைக் குறுகினனாகி-
‘வலம் படு தானை மன்னவன் ஏவ,
சிலம்பு காணிய வந்தோர் இவர்’ என,
செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம்
பொய் வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட-

~‘கோவலன் கொலைப்படுமகன் அல்லன்’ என்ற காவலாளருக்குப் பொற்கொல்லன் கள்வரின் இயல்புகளை எடுத்துரைத்தல்#

‘இலக்கண முறைமையின் இருந்தோன், ஈங்கு, இவன்
கொலைப்படு மகன் அலன்’ என்று கூறும்
அரும் திறல் மாக்களை அகநகைத்து த்து,
கருந் தொழில் கொல்லன் காட்டினன் ப்போன்.
‘மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே-இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை எனத் திரிவது?
மருந்தில் பட்டீர் ஆயின், யாவரும்
பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப் பட்டீர்:

~கள்வரின் எட்டுத் துணைகள்#

மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின்,
இந்திர-குமரரின் யாம் காண்குவமோ?
தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின்,
கைஅகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்;
மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின்,
இருந்தோம் பெயரும் இடனும்-மார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடின் அல்லது, யாவதும்
புகற்கிலர், அரும் பொருள் வந்து கைப் புகுதினும்;
தந்திர-கரணம் எண்ணுவர் ஆயின்,
இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்;
இவ் இடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின்,
அவ் இடத்து அவரை யார் காண்கிற்பார்?
காலம் கருதி அவர் பொருள் கையுறின்,
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ?
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்,
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார்?
இரவே பகலே என்று இரண்டு இல்லை;
கரவு இடம் கேட்பின், ஓர் புகல் இடம் இல்லை.

~கள்வன் ஒருவனின் செய்தி#

தூதர் கோலத்து வாயிலின் இருந்து,
மாதர் கோலத்து வல் இருள் புக்கு,
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று, ஆங்கு,
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம்
வெயில் இடு வயிரத்து, மின்னின் வாங்க,
துயில்கண் விழித்தோன் தோளில் காணான்
உடைவாள் உருவ, உறை கை வாங்கி,
எறிதொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான்.
மல்லின் காண, மணித் தூண் காட்டி,
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னைக்
கண்டோர் உளர் எனின் காட்டும்: ஈங்கு இவர்க்கு
உண்டோ உலகத்து ஒப்போர்?’ என்று, அக்
கருந் தொழில் கொல்லன் சொல்ல- ஆங்கு, ஓர்

~காவல் இளைஞன் ஒருவன் கள்வனைப் பற்றிக் கூறிய நிகழ்ச்சி#

திருந்து வேல் தடக் கை இளையோன் கூறும்:
‘நிலன் அகழ் உளியன், நீலத் தானையன்,
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று,
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து,
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற,
கை வாள் உருவ, என் கை வாள் வாங்க,
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன்;
அரிது இவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்;
உரியது ஒன்று மின், உறு படையீர்!’ என-

~கல்லாக் களிமகன் ஒருவன் வாளால் எறிய, கோவலன் குருதி சோர, மண்ணின்மேல் மாண்டு விழுதல்#

கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது;
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப,
மண்ணக மடந்தை வான் துயர் கூர,
காவலன் செங்கோல் வளைஇய, வீழ்ந்தனன்,
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து-என்.

~வெண்பா#
நண்ணும், இரு வினையும்; நண்ணுமின்கள், நல் அறமே-
கண்ணகி-தன் கேள்வன் காரணத்தான், மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை
விளைவாகி வந்த வினை.

&

கோவலன் கண்ணகியருக்கு ஒரு புது மனையிலே இடந்தந்து, பல்வகைப் பொருளும் தருகின்றாள் மாதரி. தன் மகளையும் கண்ணகிக்குத் துணையாக அமைக்கின்றாள். கண்ணகி சோறாக்கித் தன் கணவனை உண்பிக்க, அவனும் அவளைப் பாராட்டி, தன் நிலைக்கு வருந்துகின்றான். கண்ணகியின் காற்சிலம்புகளுள் ஒன்றைக் கையிலே எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குப் போய் விலை மாறி வருவதாகக் கூறிச் சென்றான். கடைவீதி வழியே செல்லும்போது பொற்கொல்லன் ஒருவன் தன் பின்னே நூற்றுக்கணக்கான பொற்கொல்லர் தொடர்ந்துவர முன்னால் நடந்து வந்தான். அவனை அரண்மனைப் பொற்கொல்லன் என்று கருதி கோவலன் தான் கொண்டுவந்த காற்சிலம்பை அவனிடம் கொடுத்து விற்றுத் தருமாறு வேண்டுகின்றான். தன் குடிலில் கோவலனை இருத்திவிட்டு அக்காற்சிலம்பை மன்னருக்கு அறிவித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் கொல்லப்பட்டு இறந்தான்.

மதுரைக் காண்டம் $ அடைக்கலக் காதை

கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும் கோவலன் த்தல்#

நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி-

~மாடல மறையவன் வர, கோவலன் அவனை வணங்குதல்#

தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து,
தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க-

~கோவலன் செய்த அறங்களை மாடலன் பாராட்டி, அவன் மனைவியுடன் தனியாக மதுரை வந்ததற்கு இரங்குதல்#

நா வல் அந்தணன் தான் நவின்று, ப்போன்-
~முதுமறையோனை மத யானையிடமிருந்து விடுவித்தமை#

‘வேந்து உறு சிறப்பின் விழுச் சீர் எய்திய,
மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து,
வாலாமை நாள் நீங்கிய பின்னர்,
மா முது கணிகையர், “மாதவி மகட்கு
நாம நல் நாட்டுதும்” என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு, ஆங்கு,
“இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்;
வந்தேன்; அஞ்சல்; மணிமேகலை யான்;
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது;
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக’ என,
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என:
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செங் கையின் பொழிய;
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்,
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை;
பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள்;
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,
மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!

~கீரியைக் கொன்ற பார்ப்பனியின் துயர் தீர்த்தமை#

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக,
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல,
வடதிசைப் பெயரும் மா மறையாளன்,
“கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க” என,
பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறும் மறுகி,
“கருமக் கழி பலம் கொள்மினோ” எனும்
அரு மறை ஆட்டியை அணுகக் கூஉய்,
“யாது நீ உற்ற இடர்? ஈது என்?” என,
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி,
“இப் பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி,
கைப் பொருள் தந்து, என் கடுந் துயர் களைக’ என
அஞ்சல்! உன்-தன் அரும் துயர் களைகேன்;
நெஞ்சு உறு துயரம் நீங்குக” என்று, ஆங்கு,
ஒத்து உடை அந்தணர் -நூல் கிடக்கையின்,
தீத் திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க,
தானம் செய்து, அவள்-தன் துயர் நீக்கி
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!

~பூதம் கொன்ற தீயோனின் சுற்றத்தாரைப் பாதுகாத்தமை#

பத்தினி ஒருத்தி படிற்று எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி,
“என் உயிர் கொண்டு, ஈங்கு இவன் உயிர் தா” என,
நல் நெடும் பூதம் நல்காதாகி,
“நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு,
பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை;
ஒழிக, நின் கருத்து” என, உயிர் முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து, அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து,
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்!
இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒரு தனி உழந்து, இத்
திருத்தகு மா மணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்த கோபால! நீ?’ என வினவ-

~கோவலன் தான் கண்ட கனவைக் கூறல்#

கோவலன் கூறும்: ‘ஓர் குறுமகன்-தன்னால்,
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்,
நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த,
கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;
அணித்தகு புரி குழல் ஆய்-இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்;
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,
காமக்கடவுள் கையற்று ஏங்க,
அணி திகழ் போதி அறவோன்-தன் முன்,
மணிமேகலையை மாதவி அளிப்பவும்;
நனவு போல, நள் இருள் யாமத்து,
கனவு கண்டேன்: கடிது ஈங்கு உறும்’ என-

~கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் கள்#

‘அறத்து உறை மாக்கட்கு அல்லது, இந்தப்
புறச்சிறை இருக்கை பொருந்தாது; ஆகலின்,
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின்
யின் கொள்வர்; இங்கு ஒழிக நின் இருப்பு;
காதலி-தன்னொடு கதிர் செல்வதன்முன்,
மாட மதுரை மா நகர் புகுக’ என,
மாதவத்து ஆட்டியும் மா மறை முதல்வனும்
கோவலன்-தனக்குக் கூறும்காலை-

~மாதரி என்னும் ஆயர் குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்#

அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங் கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்து, பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள், மாதரி என்போள்,
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-

~கவுந்தி மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்#

‘ஆ காத்து ஓம்பி, ஆப் பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை;
தீது இலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்;
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று’ என எண்ணினளாகி,
‘மாதரி! கேள்; இம் மடந்தை-தன் கணவன்
தாதையைக் கேட்கின், தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு,
கருந் தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்;
உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்,
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்-

~கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி, அவளைப் பாராட்டி த்தல்#

மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் தீட்டி,
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து,
தூ மடி உடீஇ; தொல்லோர் சிறப்பின்
ஆயமும், காவலும், ஆய்-இழை-தனக்கு,
தாயும், நீயே ஆகித் தாங்கு: ஈங்கு,
என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்:
கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி,
தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,
இன் துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது,
பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால்:
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல் அறியாயோ நீ?-

~தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக் கவுந்தி அடிகள் மாதரிக்கு த்தல்#

தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும்,
மிகப் பேர் இன்பம் தரும்; அது கேளாய்;
காவிரிப் படப்பைப் பட்டினம்-தன்னுள்
பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலமேல் இருந்தருளி,
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன்;
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
தாரன் மாலையன், தமனியப் பூணினன்,
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்துப்
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை;
சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, “ஈங்கு
யாது இவன் வரவு?” என, இறையோன் கூறும்:

~சாரணர் கூறிய குரங்குக்கை வானவனது வரலாறு#

“எட்டி சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில், ஓர்
மாதவ முதல்வனை மனைப் பெரும் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி, உள்புக்கு,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி,
எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து, ‘நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத்தீ!’ என,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி;
காதல் குரங்கு கடைநாள் எய்தவும்,
தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு
‘தீது அறுக’ என்றே செய்தனள்: ஆதலின்,
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்,
உத்தர-கௌத்தற்கு ஒரு மகன் ஆகி;
உருவினும் திருவினும், உணர்வினும், தோன்றி;
பெரு விறல் தானம் பலவும் செய்து; ஆங்கு,
எண்-நால் ஆண்டின் இறந்த பிற்பாடு;
விண்ணோர் வடிவம் பெற்றனன்: ஆதலின்,
‘பெற்ற செல்வப் பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு’ என,
பண்டைப் பிறப்பில் குரங்கின் சிறு கை
கொண்டு, ஒரு பாகத்து; ‘கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இவ் வடிவு; அறிமினோ, என,
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத்
தேவ குமரன் தோன்றினன்” என்றலும்-

~கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல்#

சாரணர் கூறிய தகைசால் நல்மொழி
ஆர் அணங்கு ஆக, அறம் தலைப்பட்டோர்
அன்று அப் பதியுள் அரும் தவ மாக்களும்,
தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்,
இட்ட தானத்து எட்டியும், மனைவியும்,
முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்;
கேட்டனை ஆயின், தோட்டு-ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக’ என்றே கவுந்தி கூற-

~மாதரி கண்ணகியுடன் மாலையில் தன் மனைக்குச் செல்லுதல்#

உவந்தனள் ஏத்தி,
வளர் இள வன முலை, வாங்கு அமைப் பணைத் தோள்,
முளை இள வெண் பல், முதுக்குறை நங்கையொடு;
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்து;
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப,
மறித் தோள் நவியத்து உறிக் காவாளரொடு
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ;
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,
தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,
கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளால்-
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து-என்.

&

புறஞ்சேரிக்குத் திரும்பிய கோவலன், மதுரையிலே கண்டவெல்லாம், கவுந்தியிடம் வியப்போடு எடுத்துக் கூறினான். ‘தென்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி’ என்று சொல்லி மதுரை சென்றவன், அதுபற்றி ஏதுங் கூறவில்லை. கவுந்தியம்மை கவலையடைகின்றார். அவ்வேளை, ‘மாடலன்’ அங்கே வருகின்றான். கோவலனின் சிறப்புகளைக் கூறுகின்றான். துறந்தோருக்குரிய அவ்விடத்தை விட்டுப் பொழுது மறைவதற்குள் மதுரை நகருட் செல்லுமாறு மாடலனும் கவுந்தியும் கோவலனைத் தூண்டுகின்றனர். அவன் செயலற்று இருக்கவே, அவ்வழியாக வந்த மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக அளிக்கின்றார் கவுந்தியடிகள். அவளும், கண்ணகியுடன் கோவலனும் பின்வரத் தன்வீட்டிற்கு அவளை அன்போடு அழைத்து போகின்றாள்

மதுரைக் காண்டம் $ ஊர் காண் காதை

#சூரியன் உதித்தல#

புறஞ்சிறைப் பொழிலும், பிறங்கு நீர்ப் பண்ணையும்,
இறங்கு கதிர்க் கழனியும், புள் எழுந்து ஆர்ப்ப;
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம்
வேந்து தலை பனிப்ப, ஏந்து வாள் செழியன்
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப-

#காலை முரசத்தின் ஒலி#

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்,
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்,
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்.
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்,
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்,
வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய
காலை முரசம் கனை குரல் இயம்ப-

~மதுரை நகரைக் காணவேண்டும் என்னும் தனது விருப்பத்தைக் கவுந்தி அடிகளிடம் கோவலன் தெரிவித்தல்#

கோவலன் சென்று, கொள்கையின் இருந்த
கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி,
‘நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி,
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த,
அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து,
சிறுமை உற்றேன், செய் தவத்தீர்! யான்:
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தி, யான் வரும்காறும்,
பாதக் காப்பினள் பைந்தொடி; ஆகலின்,
ஏதம் உண்டோ, அடிகள்! ஈங்கு?’ என்றலும்-

~கவுந்தி ஆறுதல் மொழி கூறி, ஊர் கண்டு வருமாறு பணித்தல்#

கவுந்தி கூறும்: ‘காதலி-தன்னொடு
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்!
“மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்” என்று,
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்,
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்;
தீது உடை வெவ் வினை உருத்தகாலை,
பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்;
ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை,
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும்,
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரி குழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது,
ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை;
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்
கண்டனர் ஆகி, கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு,
ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால், இறந்தோர் பலரால்;
தொன்றுபட வரூஉம் தொன்மைத்து, ஆதலின்:
தாதை ஏவலின் மாதுடன் போகி,
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ?
வல் ஆடு ஆயத்து, மண், அரசு, இழந்து;
மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன்
காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்:
அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது
வல் வினை அன்றோ? மடந்தை-தன் பிழை எனச்
சொல்லலும் உண்டேல், சொல்லாயோ? நீ
அனையும் அல்லை; ஆய்-இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றோ?
வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்;
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு’ என்றலும்-

~சுருங்கை வீதி வழியாகச் செல்லுதல்#

இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில்
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி-

# மதில் வாயிலைக் கடந்து,
அகநகரின் எல்லையைச் சார்தல்#

கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு,
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்-

~கடை கழி மகளிரின் பொழுது போக்கு காலைப் பொழுதைக் கழித்தல்#

குட காற்று எறிந்து, கொடி நுடங்கு மறுகின்
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை
விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி,
பூம் புணை தழீஇ, புனல் ஆட்டு அமர்ந்து-

~நண்பகலில் பொழுதுபோக்கு#

தண் நறு முல்லையும், தாழ் நீர்க் குவளையும்,
கண் அவிழ் நெய்தலும், கதுப்பு உற அடைச்சி;
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெரும் துறை முத்தொடு பூண்டு;
தெக்கண மலயகச் செழுஞ் சேறு ஆடி,
பொன் கொடி மூதூர்ப் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு-

~அந்திப் பொழுதைக் கழித்தல்#

எல் படு பொழுதின் இள நிலா முன்றில்,
தாழ்தரு கோலம் தகை பாராட்ட,
வீழ் பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு-

~கடை கழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல் கார் காலம்#

அரத்தப் பூம் பட்டு அரைமிசை உடீஇ,
குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி,
சிறுமலைச் சிலம்பின் செங் கூதாளமொடு
நறு மலர்க் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து,
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து,
செங் கொடுவேரிச் செழும் பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்
அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு,
மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக்
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட,
கார் அரசாளன் வாடையொடு வரூஉம்
காலம் அன்றியும்-

~கூதிர்க் காலம்#

நூலோர் சிறப்பின்,
முகில் தோய் மாடத்து; அகில் தரு விறகின்
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து;
நறுஞ் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு
குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்-

~முன்பனிக் காலம்#

வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி,
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர,
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண் மழை
அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்-

~பின்பனிக் காலம்#

ஆங்கு அது அன்றியும், ‘ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,
தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல்
வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்?-

~இளவேனிலை வரவேற்றல்#

கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப
காவும் கானமும் கடிமலர் ஏந்த,
தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து,
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம்
இன் இளவேனில் யாண்டு உளன்கொல்?’ என்று,
உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு
பருவம் எண்ணும் படர் தீர் காலை-

~வேனில் காலக் கடை நாளில் பொழுது போக்கு#

கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக்
காடு தீப் பிறப்ப, கனை எரி பொத்தி,
கோடையொடு புகுந்து, கூடல் ஆண்ட
வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர,
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்-
வையமும், சிவிகையும், மணிக் கால் அமளியும்,
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்,
சாமரைக் கவரியும், தமனிய அடைப்பையும்,
கூர் நுனை வாளும், கோமகன் கொடுப்ப;
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து;
செம் பொன் வள்ளத்து, சிலதியர் ஏந்திய
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி;
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும்
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு:
இலவு இதழ்ச் செவ் வாய் இள முத்து அரும்ப,
புலவிக் காலத்துப் போற்றாது த்த
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்;
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன.
செங் கயல், நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்;
கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள,
திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்;
செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்-

~பதியிலாரின் இரு பெரு வீதிகள்#

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை,
வேத்தியல், பொதுவியல் என இரு திறத்து,
மாத்திரை அறிந்து, மயங்கா மரபின்
ஆடலும், வரியும், பாணியும், தூக்கும்,
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து,
நால் வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்;
வாரம் பாடும் தோரிய மடந்தையும்;
தலைப் பாட்டுக் கூத்தியும்; இடைப் பாட்டுக் கூத்தியும்;
நால் வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு, ஆங்கு,
அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக,
தவத்தோர் ஆயினும், தகை மலர் வண்டின்
நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும்,
காம விருந்தின் மடவோர் ஆயினும்,
ஏம வைகல் இன் துயில் வதியும்
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்
எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்-

~அங்காடி வீதி #

வையமும், பாண்டிலும், மணித் தேர்க் கொடுஞ்சியும்,
மெய் புகு கவசமும், வீழ் மணித் தோட்டியும்,
அதள் புனை அரணமும், அரியாயோகமும்,
வளைதரு குழியமும், வால் வெண் கவரியும்,
ஏனப் படமும், கிடுகின் படமும்,
கானப் படமும், காழ் ஊன்று கடிகையும்,
செம்பின் செய்நவும், கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும், மாலையின் புனைநவும்,
வேதினத் துப்பவும், கோடு கடை தொழிலவும்,
புகையவும், சாந்தவும், பூவின் புனைநவும்,
வகை தெரிவு-அறியா வளம் தலைமயங்கிய,
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்-

~இரத்தினக் கடைத்தெரு#

காகபாதமும், களங்கமும், விந்துவும்,
ஏகையும் நீங்கி, இயல்பின் குன்றா
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்;
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசு ஆர் மேனிப் பசுங் கதிர் ஒளியவும்;
பதுமமும், நீலமும், விந்தமும், படிதமும்,
விதி முறை பிழையா விளங்கிய சாதியும்;
பூச உருவின் பொலம் தெளித் தனையவும்;
தீது அறு கதிர் ஒளித் தெண் மட்டு உருவவும்;
இருள் தெளித்தனையவும்; இரு வேறு உருவவும்;
ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின்
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்;
காற்றினும், மண்ணினும், கல்லினும், நீரினும்,
தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்;
சந்திர-குருவே, அங்காரகன், என
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்;
கருப்பத் துளையவும், கல்லிடை முடங்கலும்,
திருக்கும், நீங்கிய செங் கொடி வல்லியும்;
வகை தெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப்
பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும்-

~பொன் கடைத்தெரு#
சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்,
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின்
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து, ஆங்கு,
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்-

~அறுவை வீதி#

நூலினும், மயிரினும், நுழை நூல் பட்டினும்
பால் வகை தெரியாப் பல் நூறு அடுக்கத்து,
நறு மடி செறிந்த அறுவை வீதியும்-

~கூல வீதி#

நிறைக் கோல் துலாத்தர், பறைக் கண் பராரையர்,
அம்பண அளவையர், எங்கணும் திரிதர,
காலம் அன்றியும், கருங் கறி மூடையொடு
கூலம் குவித்த கூல விதியும்-

~பற்பல வீதிகளையும் கண்டு, கோவலன் புறஞ்சேரிக்கு மீளுதல்#

பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
அந்தியும், சதுக்கமும், ஆவண வீதியும்,
மன்றமும், கவலையும், மறுகும்-திரிந்து,
விசும்பு அகடு திருகிய வெங் கதிர் நுழையாப்
பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல்,
காவலன் பேர் ஊர் கண்டு, மகிழ்வு எய்தி,
கோவலன் பெயர்ந்தனன், கொடி மதில் புறத்து-என்.
&
புறஞ்சிறை மூதூரிலே, கவுந்தியும் கண்ணகியையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது.

மதுரைக் காண்டம் $ புறஞ்சேரி இறுத்த காதை

#கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல#

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு,
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி,
‘கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்;
படிந்தில சீறடி பரல் வெங் கானத்து;
“கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா;
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரை தேர் முதலையும்,
உருமும், சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா-
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு” என,
எங்கணும் போகிய இசையோ பெரிதே;
பகல் ஒளி-தன்னினும், பல் உயிர் ஓம்பும்
*நிலவு ஒளி விளக்கின், நீள் இடை மருங்கின்,
இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்’ என-

#அடிகள் ஒருப்படுதல் #

குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து,
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல,
படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு-
‘பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி,
தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி,
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும
சீர் இள வன முலை சேராது ஒழியவும்,
தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல்
போது சேர் பூங் குழல் பொருந்தாது ஒழியவும்,
பைந் தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி
செந்தளிர் மேனி சேராது ஒழியவும்
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால் நிலா வெண் கதிர் பாவைமேல் சொரிய,
வேனில் திங்களும் வேண்டுதி’ என்றெ
பார்மகள் அயா உயிர்த்து, அடங்கிய பின்னர்-

# அடிகளின் அறவுரையைக் கேட்டுக்
கோவலன் வழிநடத்தல் #

ஆர் இடை உழந்த மாதரை நோக்கி
‘கொடுவரி மறுகும்; குடிஞை கூப்பிடும்;
இடிதரும் உளியமும்; இனையாது ஏகு’ என,
தொடி வளைச் செங் கை தோளில் காட்டி,
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி
அறவுரை கேட்டு, ஆங்கு, ஆர் இடை கழிந்து-
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து,
கான வாரணம் கதிர் வரவு இயம்ப,
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து-

# கோவலன் நீர் நிலை நோக்கிச் செல்லுதல்
~ மாதவத்து ஆட்டியொடு காதலி-தன்னை ஓர்
தீது தீர் சிறப்பின் சிறைஅகத்து இருத்தி,
இடு முள் வேலி நீங்கி, ஆங்கு, ஓர்
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன்,

#கோவலனது உருவ மாறுபட்டால் ஐயுற்ற கௌசிகன், உண்மை தெளிய,மாதவிப்பந்தரை நோக்கிக் கூறுதல #

காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு
ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி,
உள் புலம்புறுதலின், உருவம் திரிய;
கண்-புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்,
‘கோவலன் பிரியக் கொடுந் துயர் எய்திய,
மா மலர் நெடுங் கண் மாதவி போன்று, இவ்
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து, உடனே,
வருந்தினை போலும் நீ, மாதவி!’ என்று, ஓர்
பாசிலைக் குருகின் பந்தரில் பொருந்தி,
கோசிக மாணி கூறக் கேட்டே-

~அதைக் கேட்டகோவலன் கௌசிகனை அடுத்துக் கூறுதல் #

‘யாது நீ கூறிய ஈது, இங்கு?’ என-
‘தீது இலன், கண்டேன்’ எனச் சென்று எய்திய-

#புகாரில் நிகழ்ந்தவற்றைக் கௌசிகன் அறிவித்தல் #
கோசிக மாணி கொள்கையின் ப்போன்:
இரு நிதிக் கிழவனும் பெரு மனைக் கிழத்தியும்
அரு மணி இழந்த நாகம் போன்றதும்;
இன் உயிர் இழந்த யாக்கை என்ன,
துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்;
‘ஏவலாளர்! யாங்கணும் சென்று,
கோவலன் தேடிக் கொணர்க’ எனப் பெயர்ந்ததும்;
‘பெருமகன் ஏவல் அல்லது, யாங்கணும்,
அரசே தஞ்சம்’ என்று. அரும் கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல,
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும்;
வசந்தமாலைவாய் மாதவி கேட்டு,
பசந்த மேனியள், படர் நோய் உற்று,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு, ஓர்
படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்;
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு,
தாழ் துயர் எய்தி, தான் சென்று இருந்ததும்;
இருந் துயர் உற்றோள், ‘இணை அடி தொழுதேன்;
வரும் துயர் நீக்கு’ என, மலர்க் கையின் எழுதி.
‘கண் மணி அனையாற்குக் காட்டுக’ என்றே,
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்;
ஈத்த ஓலை கொண்டு, இடைநெறித் திரிந்து;
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்;
வழி மருங்கு இருந்து மாசு அற த்து-

~மாதவியின் முடங்கலைப் பார்த்துக் கோவலன் உண்மை உணர்தல் ஆங்கு, #

அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி,
போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து த்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான்,
ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
‘தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு-

#மாதவியின் திருமுகத்தைத் தன் தந்தைக்குக் கோவலன் அனுப்புதல #

‘என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல்,
பொற்பு உடைத்தாக, பொருள் பொருந்தியது;
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்;
கோசிக மாணி! காட்டு’ எனக் கொடுத்து,
‘நடுக்கம் களைந்து, அவர் நல் அகம் பொருந்திய
இடுக்கண் களைதற்கு ஈண்டு’ எனப் போக்கி-

~ கோவலன் மீண்டு வந்து, பாணர்களுடன் இசை பாடிப் பொழுது போக்குதல் #

மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த
ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு,
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து,
செந்திறம் புரிந்த செங்கோட்டு-யாழில்,
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து,
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி
உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி,
வரன்முறை வந்த மூ-வகைத் தானத்து,
பாய் கலைப் பாவை பாடல்-பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு,
பாடல்-பாணி அளைஇ, அவரொடு-

~ மதுரைப் பதிக்கு இன்னும் எஞ்சியுள்ள வழி பற்றிப் பாணரிடம் கோவலன் வினாவுதலும், அவர் விடை பகர்தலும் #

‘கூடல் காவதம் கூறுமின் நீர்’ என-
‘காழ் அகில் சாந்தம், கமழ் பூங் குங்குமம்,
நாவிக் குழம்பு, நலம் கொள் தேய்வை,
மான்மதச் சாந்தம், மணம் கமழ் தெய்வத்
தே மென் கொழுஞ் சேறு ஆடி; ஆங்கு,
தாது சேர் கழுநீர், சண்பகக் கோதையொடு,
மாதவி, மல்லிகை, மனை வளர் முல்லைப்
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி;
அட்டில் புகையும், அகல் அங்காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்,
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அம் தீம் புகையும், ஆகுதிப் புகையும்,
பல் வேறு பூம் புகை அளைஇ; வெல் போர்
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு-அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி;
புலவர் செந் நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது; காணீர்!
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்;
தனி, நீர் கழியினும் தகைக்குநர் இல்’ என-

# முந்திய நாளில் போல, மூவரும் இரவில் வழிநடத்தல் #
முன் நாள் முறைமையின், இருந் தவ முதல்வியொடு
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர்-
~ வைகறைப்போதில் மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல் பெயர்ந்து, ஆங்கு, #

அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்,
பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்,
பால் கெழு சிறப்பின் பல் இயம் சிறந்த
காலை முரசக் கனை குரல் ஓதையும்;
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்;
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்;
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும்
வாரிக் கொண்ட வயக் கரி முழக்கமும்;
பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்;
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்;
;கார்க் கடல் ஒலியின், கலி கெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர்கொள, ஆர் அஞர் நீங்கி-

# வையை ஆற்றின் காட்சி #
குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்,
மரவமும், நாகமும், திலகமும், மருதமும்,
சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும்,
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து;
குருகும், தளவமும், கொழுங்கொடி முசுண்டையும்,
விரி மலர் அதிரலும், வெண் கூதாளமும்,
குடசமும், வெதிரமும், கொழுங் கொடிப் பகன்றையும்,
பிடவமும், மயிலையும், பிணங்கு அரில் மணந்த
கொடுங் கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்து, சூழ்போகியஅகன்று ஏந்து அல்குல்:
வாலுகம் குவைஇய மலர்ப் பூந் துருத்தி,
பால்புடைக் கொண்டு, பல் மலர் ஓங்கி,
எதிர் எதிர் விளங்கிய கதிர் இள வன முலை:
கரைநின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ் வாய்:
அருவி முல்லை அணி நகைஆட்டி-
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங் கயல் நெடுங் கண்:
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்;
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி-
வையை என்ற பொய்யாக் குலக்கொடி-
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்,
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து,
கண் நிறை நெடு நீர் கரந்தனள், அடக்கி-

#வையையைக் கடந்து, மூவரும் தென் கரை சேர்தல் #
புனல் யாறு அன்று; இது பூம் புனல் யாறு!’ என,
அன நடை மாதரும் ஐயனும் தொழுது;
பரி முக அம்பியும், கரி முக அம்பியும்,
அரி முக அம்பியும், அரும் துறை இயக்கும்
பெரும் துறை மருங்கின் பெயராது; ஆங்கண்,
மாதவத்துஆட்டியொடு மரப் புணை போகி;
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி-

# மதுரை மா நகரின் புறஞ்சேரியை அடைதல் #
‘வானவர் உறையும் மதுரை வலம் கொளத்
தான் நனி பெரிதும் தகவு உடைத்து’ என்று, ஆங்கு,
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி;
கரு நெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும்,
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போல,
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி,
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க;
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி,
‘வாரல்’ என்பன போல், மறித்துக் கை காட்ட;
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ள நீர்ப் பண்ணையும், விரி நீர் ஏரியும்,
காய்க் குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த் திரள் பந்தரும், விளங்கிய இருக்கை;
அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர்; புக்கனர் புரிந்து-என்,

&

பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது, இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த, மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான். மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து, அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வைகையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வைகையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண் நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, ‘நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்’ என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத, புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர்.

புகார்க் காண்டம் $ நாடுகாண் காதை

#கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்#

வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்-
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப,
ஏழகத் தகரும், எகினக் கவரியும்,
தூ மயிர் அன்னமும், துணை எனத் திரியும்,
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு-

~மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்#

அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து-,

~ இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்#
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி-

~ சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்#

புலவு ஊண் துறந்து, பொய்யா விரதத்து,
அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய கொள்கை,
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐ-வகை நின்ற அருகத்தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து, தலைமயங்கிய வான் பெரு மன்றத்து,
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல்,
நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும்,
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு-

~ புகார் நகரின் வாயிலைக் கடத்தல்#
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி-

~இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்#

கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகி-

~காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்#

தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

~கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்#
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
~கண்ணகியின் வினாவும், கோவலன் த்த விடையும#

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

~கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்#

தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்திஐயையைக் கண்டு, அடி தொழலும்-

~கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்#

‘உருவும், குலனும், உயர் பேர் ஒழுக்கமும்,
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்,
உடையீர்! என்னோ, உறுகணாளரின்
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு?’ என-
‘ யாட்டு இல்லை; உறு தவத்தீர்! யான்
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்’-

~கவுந்திஅடிகள் ஊழின் வலிமையை எடுத்துக் காட்டியதோடு மதுரை செல்ல இருக்கும் தமது விருப்பத்தையும் வெளியிடுதல்#

‘பாடகச் சீறடி பரல் பகை உழவா;
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
“உரியது அன்று; ஈங்கு ஒழிக” என, ஒழியீர்;
மற நீத்த மாசு அறு கேள்வியர்
அற கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்’

~கோவலன் அடிகளின் வருகையை உவந்து கூறல்#
என்ற
காவுந்திஐயையைக் கைதொழுது, ஏத்தி,
‘அடிகள்! நீரே அருளுதிர் ஆயின், இத்
தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன்’ என-

~மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்# ~சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி#

‘கோவலன்! காணாய்; கொண்ட இந் நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல; கேள்மோ:
வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கொண்டு
பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறைப் படுத்து, போற்றா மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச்
செஞ் சுளைப் பலவின் பரல் பகை உறுக்கும்.

~வயல் வழி#

கயல் நெடுங் கண்ணி காதல் கேள்வ!
வயல் உழைப் படர்குவம் எனினே, ஆங்கு,
பூ நாறு இலஞ்சிப் பொரு கயல் ஓட்டி,
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை
மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின்,
கலங்கலும் உண்டு இக் காரிகை; ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து,
சுரும்பு சூழ் பொய்கைத் தூ நீர் கலக்கும்;
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி,
குடங்கையின் நொண்டு, கொள்ளவும் கூடும்;
குறுநர் இட்ட குவளை அம் போதொடு
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை,
நெறி செல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி,
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்;
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில்
பொறி மாண் அலவனும், நந்தும், போற்றாது,
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது, யாங்கணும்,
அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை;
நெறி இருங் குஞ்சி! நீ வெய்யோளொடு
குறி அறிந்து, அவை அவை குறுகாது ஓம்பு’ என-

~மூவரும் வழிக்கொள்ளல்#

தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என
பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்-

~காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்#

கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்,
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண்மூப் பெயல் வளம் சுரப்ப,
குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை,
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும், கிழாரும், வீங்கு இசை ஏத்தமும்,
ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் செல்லா:
கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கின்
பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து,
கம்புள் கோழியும், கனை குரல் நாரையும்,
செங் கால் அன்னமும், பைங் கால் கொக்கும்,
கானக் கோழியும், நீர் நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும்,
வெல் போர் வேந்தர் முனையிடம் போல,
பல் வேறு குழூஉக் குரல் பரந்த ஓதையும்;

~உழவரின் ஒலியும் பாட்டும்#

உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய
கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய,
கருங் கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்;
கடி மலர் களைந்து, முடி நாறு அழுத்தி,
தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்ந்து,
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றி,
செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர்
வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்;
கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து,
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி,
பார் உடைப்பனர் போல், பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்;
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;
தெண் கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்;
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு,
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்-

~மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்#

உழைப் புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு
மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்,
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து,
மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும்,
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து,
மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

~திருவரங்கத்தில் சாரணர் தோன்றுதல்#

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-

~மூவரும் சாரணரை வழிபடுதலும், அச் சாரணர் அறிவுரை பகர்தலும்#

‘பண்டைத் தொல் வினை பாறுக, என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்
வந்த காரணம், வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கின், தெரிந்தோன் ஆயினும்,
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்-
‘கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய்,
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி,
ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்;
அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்,
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான்,
சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது,
போதார், பிறவிப் பொதி-அறையோர்’ என-

~சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை#

சாரணர் வாய்மொழி கேட்டு,தவ முதல்
காவுந்திகை தன் கை தலைமேல் கொண்டு,
‘ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லது, என் செவிஅகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது, என் நா;
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது,
கைவரைக் காணினும், காணா என் கண்;
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது, என்
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர், அறவன், அறிவோற்கு அல்லது, என்
இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது, என்
தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது;
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது,
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது’

~சாரணர் மறைதல்#

என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு, அதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி,
நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி,
‘பவம் தரு பாசம் கவுந்தி கெடுக’ என்று,
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது,
‘பந்தம் அறுக’ எனப் பணிந்தனர் போந்து-

~காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் பொழிலில் இருத்தல்#

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

~வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்#

வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-

~கவுந்தியின் மறுமொழி#

மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

~தூர்த்தர்கள் பழிப்புரை#
‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

~கவுந்திஅடிகள் சாபம்#

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-
~கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி, சாபத்தை நீக்கியருள வேண்டுதல்#

கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியதுஆதலின், பட்டதை அறியார்,
குறு நரி நெடுங்குரல் கூ விளி கேட்டு,
நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
‘நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் யீரோ!’ என-

~கவுந்தி அடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்#
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி,
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்’ என-
~உறையூர் சென்று சேர்தல்#

சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின்
காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.

~கட்டுரை#

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;
அரங்கும், ஆடலும், தூக்கும், வரியும்
பரந்து இசை எய்திய பாரதி-விருத்தியும்,
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்,
ஈர்-ஏழ் சகோடமும், இடைநிலைப்பாலையும்,
தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும்,
ஊர் அகத்து ஏரும், ஒளி உடைப் பாணியும்,
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்;
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.
~வெண்பா#
காலை அரும்பி மலரும் கதிரவனும்,
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

&

வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். திருவரங்கத்தைக் கடந்து, அம்மூவரும் சோணாட்டு உறையூர் வரையும் சென்றது பற்றிக் கூறுவது இப்பகுதியாகும். இத்துடன் புகார்க் காண்டம் முடிவுற்றது.

புகார்க் காண்டம் $ கனாத்திறம் உரைத்த காதை

 

மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு இல் உறை தெய்வத்தை வழிபடுதல#

அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை
நிகர் மலர் நெல்லொடு தூஉய், பகல் மாய்ந்த
மாலை மணி விளக்கம் காட்டி, இரவிற்கு ஓர்
கோலம் கொடி-இடையார்-தாம் கொள்ள-

~மாலதியின் வரலாறு#
மாலதி இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்#

மேல் ஓர் நாள் மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க,
பால் விக்கி, பாலகன்-தான் சோர, மாலதியும்,
‘பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு
ஏற்பன கூறார்’ என்று ஏங்கி, மகக் கொண்டு,
அமரர் தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்,
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம், பகல் வாயில்
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேல்கோட்டம்,
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்,
நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
‘தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம்’ என்று மேவி-

~சாத்தன் கோயிலில் மாலதி பாடுகிடக்க, இடாகினிப்பேய் அவள் கையிலிருந்த பிணத்தைப் பிடுங்கித் தின்னுதல்#

ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு,
ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் யே அன்று; பொருள் யே; கையில்
படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு
இடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,
மடிஅகத்து இட்டாள், மகவை-

~சாத்தன் மகவாய் வருதல்#

இ்டியுண்ட மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன்
‘அஞ்ஞை! நீ ஏங்கி அழல்’ என்று, ‘முன்னை
உயிர்க் குழவி காணாய்’ என்று, அக் குழவி ஆய், ஓர்
குயில்-பொதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி,
மாயக் குழவி எடுத்து, மடித் திரைத்து,
தாய் கைக் கொடுத்தாள், அத் தையலாள்.
தூய

~தேவந்தியின் வரலாறு சாத்தன் கலை பல பயின்று; தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்#

மறையோன் பின் மாணி ஆய், வான் பொருள் கேள்வித்
துறைபோய், அவர் முடிந்தபின்னர், இறையோனும்
தாயத்தாரோடும் வழக்கு த்து, தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேய நாள்,
தேவந்தி என்பாள் மனைவி, அவளுக்கு,
‘பூ வந்த உண் கண் பொறுக்க’ என்று மேவி, தன்
மூவா இள நலம் காட்டி, ‘எம் கோட்டத்து
நீ வா’ என த்து, நீங்குதலும்-

~தேவந்தி சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்#

தூ-மொழி, ஆர்த்த கணவன் அகன்றனன், “போய் எங்கும்
தீர்த்தத் துறை படிவேன்” என்று; அவனைப் போர்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய்’ என ஒன்றன்மேல் இட்டு,
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்,
~தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்#

வாட்டு-அரும் சீர்க்
கண்ணகி-நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
‘பெறுக, கணவனோடு!’ என்றாள்-

~கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு த்தல்#

‘பெறுகேன்; கடுக்கும் என் நெஞ்சம்; கனாவினால், என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்;
“கோவலற்கு உற்றது ஓர் தீங்கு” என்று அது கேட்டு,
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனொடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; யாடேன்;
தீக் குற்றம் போலும், செறி-தொடீஇ! தீக் குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும்’-

~தேவந்தி கூறிய தேறுதல் #

பொன்-தொடீஇ! கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம் பிறப்பில்; போய்க் கெடுக! உய்த்துக்
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்,
மடல் அவிழ் நெய்தல் அம் கானல், தடம் உள,
சோம குண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கி,
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்’ என்ற அணி-இழைக்கு-அவ் ஆய்-இழையாள்,
~கண்ணகியின் மறுமொழி#

‘பீடு அன்று’ என இருந்தபின்னரே-
~கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்#

‘நீடிய காவலன் போலும், கடைத்தலையான் வந்து-நம்
கோவலன்!’ என்றாள் ஓர் குற்றிளையாள். கோவலனும்

பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த;
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ என்ன-

~கண்ணகியின் விடை#

நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
‘சிலம்பு உள; கொண்ம்’ என-

~கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்#

‘சேயிழை! கேள்; இச் சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்
மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு,
ஏடு அலர் கோதாய்! எழுக’ என்று, நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

~வெண்பா#

காதலி கண்ட கனவு கரு நெடுங் கண்
மாதவி-தன் சொல்லை வறிதாக்க, மூதை-
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

&
கண்ணகி , தேவந்தியிடம் “யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி’வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம். சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், ‘கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது’ என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்” என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள். கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின; அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத் தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி “சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்” என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். இப்பகுதியில் கண்ணகியின் கனவு விளக்கப்பட்டுள்ளது.

புகார்க் காண்டம் $ வேனிற் காதை

வேனிற் காதை
~இளவேனிலின் வருகை#

“நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும்,
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலி கெழு வஞ்சி்யும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, சால் சிறப்பின்,
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண்’’ என,
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த
இளங்கால்-தூதன் இசைத்தனன். ஆதலின்,
மகர வெல் கொடி மைந்தன் சேனை!
புகர் அறு கோலம் கொள்ளும்’ என்பது போல்,
கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணி மொழி கூற-

~மாதவி நிலா-முற்றத்தில் தனியளாய் அமர்ந்து மதுர கீதம் பாடுதல்#

மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள்
கோவலன் ஊட, கூடாது ஏகிய,
மா மலர் நெடுங் கண் மாதவி விரும்பி;
வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில்-பள்ளி ஏறி; மாண்- இழை,
தென் கடல் முத்தும், தென் மலைச் சந்தும்,
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்,
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து,
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி,
அதிரா மரபின் யாழ் கை வாங்கி,
மதுர கீதம் பாடினள், மயங்கி-
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி:

~யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில்
மாதவி மயங்குதல்#

வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி,
இடக்கை நால் விரல் மாடகம் தழீஇ,
செம்பகை, ஆர்ப்பே, கூடம், அதிர்வே,
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து,
பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணை, கிளை, பகை, நட்பு, என்று இந் நான்கின்
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி,
குரல்வாய், இளிவாய், கேட்டனள்; அன்றியும்,
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்,
உழை முதல் ஆகவும், உழை ஈறு ஆகவும்;
குரல் முதல் ஆகவும்,குரல் ஈறு ஆகவும்;
அகநிலை மருதமும், புறநிலை மருதமும்,
அருகியல் மருதமும், பெருகியல் மருதமும்:
நால் வகைச் சாதியும் நலம் பெற நோக்கி,
மூ-வகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி,
திறத்து வழிப்படூஉம் தெள் இசைக் கரணத்து,
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி

~மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து,
வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்புதல்#

சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை,
வெண் பூ மல்லிகை, வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர் பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூந்தாழை முடங்கல் வெண் தோட்டு-
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட
ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின்,
ஒரு முகம் அன்றி, உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி-
அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ, அயலது
பித்திகைக் கொழு முகை ஆணி கைக்கொண்டு,
‘மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்,
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்’ என,
எண்-எண் கலையும் இசைந்து உடன் போக,
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து எழுதி;
பசந்த மேனியள் படர் உறு மாலையின்,
வசந்தமாலையை, ‘வருக’ எனக் கூஉய்,
‘தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து, கொணர்க ஈங்கு’ என-

~வசந்தமாலை கடைவீதியில் கோவலனைக் கண்டு மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல்#

மாலை வாங்கிய வேல் அரி நெடுங் கண்,
கூல மறுகின், கோவலற்கு அளிப்ப-

~கோவலன் மாதவியின் திருமுகத்தை மறுத்தல்#

திலகமும், அளகமும், சிறு கருஞ் சிலையும்,
குவளையும், குமிழும், கொவ்வையும், கொண்ட
மாதர் வாள்முகத்து, மதைஇய நோக்கமொடு,
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்;
புயல் சுமந்து வருந்தி, பொழி கதிர் மதியத்து,
கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்,
பாகு பொதி பவளம் திறந்து, நிலா உதவிய
நாகு இள முத்தின் நகைநலம் காட்டி,
“வருக” என, வந்து “போக” எனப் போகிய
கரு நெடுங் கண்ணி காண் வரிக் கோலமும்;
அந்தி-மாலை வந்ததற்கு இரங்கி,
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி,
கிளி புரை கிளவியும், மட அன நடையும்,
களி மயில் சாயலும், கரந்தனள் ஆகி,
செரு வேல் நெடுங் கண் சிலதியர் கோலத்து
ஒரு தனி வந்த உள் வரி ஆடலும்;
சிலம்பு வாய் புலம்பவும், மேகலை ஆர்ப்பவும்,
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்,
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும்;
கோதையும், குழலும், தாது சேர் அளகமும்,
ஒரு காழ் முத்தமும், திரு முலைத் தடமும்,
மின் இடை வருத்த நல்-நுதல் தோன்றி,
சிறுகுறுந் தொழிலியர் மறு மொழி உய்ப்ப,
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி,
தளர்ந்த சாயல், தகை மென் கூந்தல்
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரிக் கோலமும்;
பிரிந்து உறை காலத்து, பரிந்தனள் ஆகி,
என் உறு கிளைகட்குத் தன் உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து த்த தேர்ச்சி வரி; அன்றியும்,
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி,
கண்டவர்க்கு த்த காட்சி வரியும்;
அடுத்துஅடுத்து, அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்;
ஆடல் மகளே ஆதலின், ஆய்-இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி-தனக்கு’ என-

~திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை
மாதவிக்கு த்தல்#
அணித் தோட்டுத் திரு முகத்து ஆய்-இழை எழுதிய
மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி,
வாடிய உள்ளத்து வசந்தமாலை
தோடு அலர் கோதைக்குத் துனைந்து சென்று ப்ப-

~மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர் அமளியில்
கண் துயிலாது கிடத்தல்#

‘மாலை வாரார் ஆயினும், மாண்-இழை!
காலை காண்குவாம்’ என, கையறு நெஞ்சமொடு
பூ மலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்-
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.

வெண்பா
செந்தாமரை விரிய, தேமாங் கொழுந்து ஒழுக,
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ, கொந்து ஆர்
*இளவேனில் வந்ததால்; என் ஆம்கொல்-இன்று,
வள வேல் நல் கண்ணி மனம்?
*இளவேனல்
‘ஊடினீர் எல்லாம், உருவிலான்-தன் ஆணை!
கூடுமின்’ என்று குயில் சாற்ற, நீடிய
வேனல்-பாணிக் கலந்தாள் மென் பூந் திருமுகத்தை,
கானல்-பாணிக்கு அலந்தாய்! காண்.

&

இளவேனிற் பருவமும் வந்தது. கோவலனின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே! தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இளவேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது என்பதையும் காணலாம். இளவேனில் பற்றிய ஏக்கமே, கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.

புகார்க் காண்டம் $ கானல் வரி

~வயந்தமாலை கையிலிருந்த நல் யாழை மாதவி தொழுது
வாங்கி, திருத்தி, கோவலனிடம் நீட்ட,அவன் அதை
வாங்கி, கானல் வரி பாடத் தொடங்குதல் #
கட்டுரை

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல்,தைவரல்,
கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்,
நண்ணிய குறும்போக்கு, என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇ;
பண் வகையான் பரிவு தீர்ந்து;
மரகதமணித் தாள் செறிந்தமணிக் காந்தள் மெல் விரல்கள்,
பயிர் வண்டின் கிளை போல, பல் நரம்பின்மிசைப் படர;
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,
ஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்ட வகை தன் செவியின் ஓரத்து-
‘ஏவலன்; பின்,பாணி யாது?’ என,
கோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,
காவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும்,

மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன்.

~முகம் உடை வரி-ஆற்று வரி காவிரியை நோக்கிப் பாடியன்#

திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி,செங்கோல்-அது ஓச்சி,
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று

அறிந்தேன்; வாழி, காவேரி!

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல்-அது ஓச்சி,
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன்; வாழி, காவேரி!

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்

வளனே; வாழி, காவேரி!-
~சார்த்து வரி-முகச் சார்த்து# ~புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல் – தோழி தலைமகன்
முன் நின்று வரைவு கடாதல#

கரிய மலர் நெடுங் கண் காரிகைமுன் கடல்-தெய்வம்
காட்டி காட்டி,
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று, ஏழையம் யாங்கு
அறிகோம், ஐய?
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே,
விளங்கும் வெள்ளைப்
புரி வளையும் முத்தும் கண்டு-ஆம்பல் பொதி அவிழ்க்கும்
புகாரே, எம் ஊர்.

காதலர் ஆகி, கழிக் கானல், கையுறை கொண்டு,
எம் பின் வந்தார்
ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப, நிற்பதை யாங்கு
அறிகோம், ஐய?
மாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு
மலர்ந்த நீலப்
போதும், அறியாது-வண்டு ஊசலாடும்
புகாரே, எம் ஊர்.

மோது முது திரையான் மொத்துண்டு, போந்து அசைந்த
முரல் வாய்ச் சங்கம்
மாதர் வரி மணல்மேல் வண்டல் உழுது அழிப்ப,
மாழ்கி, ஐய!
கோதை பரிந்து அசைய, மெல் விரலால் கொண்டு ஓச்சும்
குவளை மாலைப்
போது சிறங்கணிப்ப, போவார் கண் போகாப்
புகாரே, எம் ஊர்.
~முகம் இல் வரி# ~ குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்#

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல், உழுத
தோற்றம் மாய்வான்,
பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து, நுண் தாது
போர்க்கும் கானல்,
நிறை மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே
தீர்க்கும் போலும்.
~கானல் வரி# ~கழற்று எதிர்மறை#

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று, புள்
ஓப்புதல் தலைக்கீடு ஆக,
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி
நறு ஞாழல் கையில் ஏந்தி,
மணம் கமழ் பூங் கானல் மன்னி,மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல்,
அடையேன் மன்னோ.

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில்,
மலர் கை ஏந்தி,
விலை மீன் உணங்கல் பொருட்டாக
வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்
கொலை வேல் நெடுங் கண் கொடுங் கூற்றம் வாழ்வது
அலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவெனேல்,

அடையேன் மன்னோ.
~நிலைவரி தமியளாக இடத்து எதிர்ப்பட்ட
தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்#
கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்த்த முகம் திங்களோ, காணீர்!
திங்களோ, காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே!

எறி வளைகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,
கறை கெழு வேல் கண்ணோ கடுங் கூற்றம், காணீர்!
கடுங் கூற்றம், காணீர்-கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே!

புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி, கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!
அணங்கு இதுவோ, காணீர்-அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே!

~முரி வரி
பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது த்தல்#

பொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,
பழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,
முழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,

எழுது-அரு மின் இடையே-எனை இடர் செய்தவையே.

திரை விரிதரு துறையே, திரு மணல் விரி இடமே,
விரை விரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,
மரு விரி புரி குழலே, மதி புரை திரு முகமே,

இரு கயல் இணை விழியே-எனை இடர் செய்தவையே.

வளை வளர்தரு துறையே, மணம் விரிதரு பொழிலே,
தளை அவிழ் நறு மலரே, தனியவள் திரி இடமே,
முளை வளர் இள நகையே, முழு மதி புரை முகமே,
இளையவள் இணை முலையே-எனை இடர் செய்தவையே.

~திணைநிலை வரி # ~புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்#

கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்!

கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்!

ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்:
பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்!

~குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது
தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், அவளை
விடுத்தல் அருமையால், ஆற்றானாய்த் தன்
நெஞ்சிற்குச் சொல்லுதல்#

பவள உலக்கை கையால் பற்றி,
தவள முத்தம் குறுவாள் செங் கண்,
தவள முத்தம் குறுவாள் செங் கண்
குவளை அல்ல! கொடிய, கொடிய!

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்
கொன்னே வெய்ய! கூற்றம், கூற்றம்!

கள் ‘வாய் நீலம் கையின் ஏந்தி,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்
வெள் வேல் அல்ல! வெய்ய, வெய்ய!

~காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை
எய்தியோன் சொல்லுதல்#

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்.

கட்டுரை
~மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல் கோவலனிடம்
இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்#்

ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்’ என,
கலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,
நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன்.

~ஆற்றுவரி காவிரியை நோக்கிப் பாடியன#

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப் பூ ஆடை-அது போர்த்து,
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்தாய்; வாழி, காவேரி!
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை;
அறிந்தேன்; வாழி, காவேரி!

பூவர் சோலை மயில் ஆல,
புரிந்து குயில்கள் இசை பாட,
காமர் மாலை அருகு அசைய,
நடந்தாய்; வாழி, காவேரி!
காமர் மாலை அருகு அசைய,
நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே;
அறிந்தேன், வாழி, காவேரி!

வாழி அவன்-தன் வள நாடு
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாய்; வாழி, காவேரி!
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
அருளே; வாழி, காவேரி!

~சார்த்துவரி# ~புகாரைப் பற்றிய பாடல்கள்# ~கையுறை மறுத்தல்#

தீம்-கதிர் வாள் முகத்தாள் செவ் வாய் மணி முறுவல்
ஒவ்வாவேனும்,
‘வாங்கும் நீர், முத்து’ என்று, வைகலும், மால்-மகன் போல்
வருதிர், ஐய!
வீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய வெண் முத்தம்;
விரை சூழ் கானல்
பூங் கோதை கொண்டு; விலைஞர் போல் மீளும்
புகாரே, எம் ஊர்.

~தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்#

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து
மடவார் செங் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்-யாங்கு
அறிகோம்? ஐய!
நிறை மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்னை
அரும்பிப் பூத்த
பொறை மலி பூங் கொம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும்
புகாரே, எம் ஊர்.

உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள்,
உறை ஒன்று இன்றித்
தண்டா நோய் மாதர் தலைத் தருதி என்பது யாங்கு
அறிகோம்? ஐய!
வண்டால் திரை அழிப்ப, கையான் மணல் முகந்து,
மதிமேல் நீண்ட,
புண் தோய் வேல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும்
புகாரே, எம் ஊர்.

~திணைநிலை வரி# ~அறியேன் என்று வலிதாகச் சொல்லி,
பாங்கி குறைநயப்பித்தல்#

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி,
இணர் ததையும் பூங் கானல் என்னையும் நோக்கி,
உணர்வு ஒழியப் போன, ஒலி திரை நீர்ச் சேர்ப்பன்,
வணர் சுரி ஐம்பாலோய்! வண்ணம் உணரேனால்.

~காமம் மிக்க கழிபடர் கிளவி#

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,
எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.

புன்கண் கூர் மாலைப் புலம்பும் என் கண்ணே போல்,
துன்பம் உழவாய், துயிலப் பெறுதியால்;
இன் கள் வாய் நெய்தால்! நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்டறிதியோ?

புள் இயல் மான் தேர்-ஆழி போன வழி எல்லாம்,
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று என் செய்கோ?
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று எம்மோடு ஈங்கு
உள்ளாரோடு உள்ளாய்; உணராய்; மற்று என் செய்கோ?

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற, ஓதமே;
பூந் தண் பொழிலே! புணர்ந்து ஆடும் அன்னமே!
ஈர்ந் தண் துறையே! ‘இது தகாது’ என்னீரே.

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; வாழி, கடல் ஓதம்!
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்!

~மயங்கு திணைநிலை வரி
அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்#

நல் நித்திலத்தின் பூண் அணிந்து,
நலம் சார் பவளக் கலை உடுத்து
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரை உலாவு கடல் சேர்ப்ப!
புன்னைப் பொதும்பர் மகரத் திண்
கொடியோன் எய்த புதுப் புண்கள்
என்னைக் காணாவகை மறைத்தால்,
அன்னை காணின், என் செய்கோ?

வாரித் தரள நகை செய்து,
வண் செம் பவள வாய் மலர்ந்து,
சேரிப் பரதர் வலை முன்றில்
திரை உலாவு கடல் சேர்ப்ப!
மாரிப் பீரத்து அலர் வண்ணம்
மடவாள் கொள்ள, கடவுள் வரைந்து
‘ஆர் இக் கொடுமை செய்தார்?’ என்று
அன்னை அறியின், என் செய்கோ?

புலவு உற்று, இரங்கி, அது நீங்க,
பொழில்-தண்டலையில் புகுந்து உதிர்ந்த
கலவைச் செம்மல் மணம் கமழ
திரை உலாவு கடல் சேர்ப்ப!
பல உற்று, ஒரு நோய் துணியாத
படர் நோய் மடவாள் தனி உழப்ப,
அலவுற்று, இரங்கி, அறியா நோய்
அன்னை அறியின், என் செய்கோ?

~பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு த்தல்#

இளை இருள் பரந்ததுவே; எல் செய்வான் மறைந்தனனே;
களைவு-அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே;
தளை அவிழ் மலர்க் குழலாய்! தணந்தார் நாட்டு உளதாம் கொல்-
வளை நெகிழ, எரி சிந்தி, வந்த இம் மருள் மாலை?

கதிரவன் மறைந்தனனே; கார் இருள் பரந்ததுவே;
எதிர் மலர் புரை உண் கண் எவ்வ நீர் உகுத்தனவே:
புது மதி புரை முகத்தாய்! போனார் நாட்டு உளதாம் கொல்-

மதி உமிழ்ந்து, கதிர் விழுங்கி, வந்த இம் மருள் மாலை?

பறவை பாட்டு அடங்கினவே; பகல் செய்வான் மறைந்தனனே;
நிறை நிலா நோய் கூர, நெடுங் கண் நீர் உகுத்தனவே;
துறு மலர் அவிழ் குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்கொல்-
மறவை ஆய், என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை?
~சாயல் வரி# ~மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி இயற்பழிக்க, தலைமகள் இயற்பட மொழிதல்#

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்.

கானல் வேலிக் கழிவாய் வந்து,
‘நீ நல்கு’ என்றே நின்றார் ஒருவர்:
‘நீ நல்கு’ என்றே நின்றார்,அவர் நம்
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.

அன்னம் துணையோடு ஆடக்கண்டு,
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்:
நென்னல் நோக்கி நின்றார்,அவர் நம்
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர்.

~முகம் இல் வரி# ~காமம் மிக்க கழிபடர் கிளவி#

அடையல், குருகே! அடையல் எம் கானல்,
அடையல், குருகே! அடையல் எம் கானல்,
உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு உறு நோய் யாய்;
அடையல், குருகே! அடையல் எம் கானல்.

கட்டுரை ~மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல் #
ஆங்கனம் பாடிய ஆய்-இழை, பின்னரும்,
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல்
தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ,
பாங்கினில் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த்தாள்.

~முகம் இல் வரி# ~தலைவி மாலைப் பொழுது கண்டு கூறுதல்#

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை!
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்,
கொளை வல்லாய்! என் ஆவி கொள்; வாழி, மாலை!

பிரிந்தார் பரிந்து த்த பேர் அருளின் நீழல்
இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப் புறத்தாய், மாலை!
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்றா வேந்தன்
எயில்-புறத்து வெந்தனோடு என் ஆதி, மாலை?

பையுள் நோய் கூர, பகல் செய்வான் போய் வீழ,
வையமோ கண் புதைப்ப, வந்தாய், மருள் மாலை!
மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின்,
ஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை!

~வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல்#

‘தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை
தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால்,
பூக் கமழ் கானலில் பொய்ச் சூள் பொறுக்க’ என்று,
மாக் கடல்-தெய்வம்! நின் மலர் அடி வணங்குதும்.

கட்டுரை ~கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு மாதவியைப் பிரிந்து போதல்#

எனக் கேட்டு,
‘கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்’ என
யாழ்-இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,
‘பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்’ என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்-தான் போன பின்னர்-
~மாதவி, கோவலனுடன் இன்றி, தனியளாய் ஆயத்துடன்
தன் மனை புகுதல்#

தாது அவிழ் மலர்ச் சோலை, ஓதை ஆயத்து ஒலி அவித்து,
கையற்ற நெஞ்சினளாய், வையத்தின் உள் புக்கு,
காதலனுடன் அன்றியே, மாதவி தன் மனை புக்காள்-
‘ஆங்கு,
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும்,
சூழி யானை, சித வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப,
ஆழி மால் வரை அகவையா’ எனவே.

&

கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே, கோவலனின் மனம் மாறுகின்றது அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோத்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனும் ஆயினான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே, தனியாகவே, தன்மனைச் சென்று புகுந்தாள். கானல் விழாவின் முடிவில் மன்னனை வாழ்த்தும் மரபும் பேணப்பட்டது. ஊழ்வினை வந்து உருத்தது என்பதனைக் காட்டும் உருக்கமான பகுதி இது

புகார்க் காண்டம் $ கடல் ஆடு காதை

விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு விழா எடுத்தல#
வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி,
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னொடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சைவீரன்-

~இந்திர விழாவைப் பற்றியும், புகார்க் காட்சிகளைப் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு த்தல்#

‘தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள்
இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது’ என-
‘கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி,
கொடுவரி ஊக்கத்துக் கோ-நகர் காத்த
தொடு கழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி,
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்து, பலி உண்ணும் இடனும் காண்கும்;
அமராபதி காத்து, அமரனின் பெற்று,
தமரின் தந்து, தகைசால் சிறப்பின்
பொய் வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐ-வகை மன்றத்து அமைதியும் காண்குதும்;
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்,
தோரிய மடந்தை வாரம் பாடலும்,
ஆயிரம் கண்ணோன் செவிஅகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி,
மங்கலம் இழப்ப வீணை,’’மண்மிசைத்
தங்குக இவள்’’ எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய,
அங்கு, அரவு-அல்குல் ஆடலும் காண்குதும்;
துவர் இதழ்ச் செவ் வாய்த் துடி இடையோயே!
அமரர் தலைவனை வணங்குதும் யாம்’என-

~விஞ்சை வீரன் காதலியுடன் புகார் வந்து விழாக் காண்டல#

சிமையத்து இமயமும், செழு நீர்க் கங்கையும்,
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்,
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும், காட்டி; பின்னர்,
பூ விரி படப்பைப் புகார் மருங்கு எய்தி,
சொல்லிய முறைமையின் தொழுதனன் காட்டி;
மல்லல் மூதூர் மகிழ் விழாக் காண்போன்,

~மாதவி ஆடிய பதினோர் ஆடலைக் காதலிக்குக் காட்டி, விஞ்சை வீரன் மகிழ்தல#

‘மாயோன் பாணியும், வருணப் பூதர்
நால் வகைப் பாணியும், நலம் பெறு கொள்கை
வான் ஊர் மதியமும் பாடி, பின்னர்-
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க-
பாரதி ஆடிய பாரதி-அரங்கத்து,
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட,
எரி முகப் பேர் அம்பு ஏவல் கேட்ப,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;
தேர் முன் நின்ற திசைமுகன் காண,
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்;
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் தொகுதியும்; அவுணன் கடந்த
மல்லின் ஆடலும்; மாக் கடல் நடுவண்,
நீர்த் திரை அரங்கத்து, நிகர்த்து முன் நின்ற
சூர்த் திறம் கடந்தோன் ஆடிய துடியும்;
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த,
குடை வீழ்த்து, அவர் முன் ஆடிய குடையும்;
வாணன் பேர் ஊர் மறுகிடை நடந்து,
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்;
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்;
காய் சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள்,
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்:
செரு வெங் கோலம் அவுணர் நீங்க,
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்;
வயலுழை நின்று, வடக்கு வாயிலுள்,
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்-
அவரவர் அணியுடன்; அவரவர் கொள்கையின்;
நிலையும், படிதமும், நீங்கா மரபின்;
பதினோர் ஆடலும், பாட்டின் பகுதியும்,
விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய்;
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்’ எனக்
காதலிக்கு த்து, கண்டு, மகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன்-

~விழா முடிந்தபின் மாதவி கோலம் புனைந்து, கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்#

அந்தரத்துள்ளோர், அறியா மரபின்,
வந்து காண்குறூஉம் வானவன் விழவும்,
ஆடலும், கோலமும், அணியும், கடைக்கொள-
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப;
பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,
ஊறின நல் நீர், த்த நெய் வாச,
நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;
புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி;
அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ;
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,
அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து;

குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து;
பிறங்கிய முத்தரை முப்பத்து-இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ;
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து;
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை,
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை,
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து;
வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம்,
கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி,
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து;

சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து;
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு;
இந்திர-நீலத்து இடை இடை திரண்ட
சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அணிந்து;
தெய்வ உத்தியொடு, செழு நீர் வலம்புரி,
தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி,
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து;
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்-

~கடற்கரைப் பயணம#

உரு கெழு மூதூர் உவவுத் தலைவந்தென,
பெரு நீர் போகும் இரியல் மாக்களொடு
மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி-
பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப,
வைகறை யாமம் வாரணம் காட்ட,
வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய;
வான வண் கையன் அத்திரி ஏற,
மான் அமர் நோக்கியும் வையமும் ஏறி-
கோடி பல அடுக்கிய கொழு நிதிக் குப்பை
மாடம் மலி மறுகின், பீடிகைத் தெருவின்,
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து, ஆங்கு
அலர், கொடி-அறுகும், நெல்லும், வீசி,
மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப,
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து;
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து, விரி திரைப் பரப்பின்,
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்கு சென்று எய்தி-

~வைகறையில் கடற்கரைக் காட்சி#

வண்ணமும், சாந்தும், மலரும், சுண்ணமும்,
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்;
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்;
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்;
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;
நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்;
இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்;
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்;
விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;
மொழி பெயர் *தேஎத்தோர் ஒழியா விளக்கமும்;
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும்;
எண்ணு வரம்பு அறியா இயைந்து,ஒருங்கு ஈண்டி;
இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சி-அது ஆகி;
விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பில்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல் அம் கானல்-
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி;

~நகர மக்கள் கடற்கரையில் களித்திருக்கும் காட்சி#

நிரை நிரை எடுத்த புரை தீர் காட்சிய
மலைப் பல் தாரமும், கடல் பல் தாரமும்,
வளம் தலைமயங்கிய துளங்கு கல-இருக்கை-
அரசு இளங் குமரரும், உரிமைச் சுற்றமும்;
பரத குமரரும், பல் வேறு ஆயமும்;
ஆடு கள மகளிரும்; பாடு கள மகளிரும்;
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்-
விண் பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலை நாள் போல,
வேறு வேறு கோலத்து, வேறு வேறு கம்பலை,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி-
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப-

~மாதவி கோவலனுடன் வீற்றிருத்தல#

கடல் புலவு கடிந்த மடல் பூந் தாழைச்
சிறை செய் வேலி அகவயின், ஆங்கு, ஓர்
புன்னை நீழல், புது மணல் பரப்பில்,
ஓவிய எழினி சூழ உடன் போக்கி,
விதானித்துப் படுத்த வெண் கால் அமளிமிசை,
வருந்துபு நின்ற வசந்தமாலை கை,
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி,
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள்,
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.

~வெண்பா#
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு
மாலைத் துயின்ற மணி வண்டு காலைக்
களி நறவம் தாது ஊத, தோன்றிற்றே-காமர்
தெளி நிற வெங் கதிரோன் தேர்.

&
விஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரைச் சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் பகுதி இது

புகார்க் காண்டம் $ இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சூரியன் உதித்தல்#

அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து,
ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல்,
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதை இருள் – படாஅம் போக நீக்கி,
உதைய மால் வரை உச்சித் தோன்றி,
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி –

~மருவூர்ப் பாக்கம்#

வேயா மாடமும்; வியன் கல இருக்கையும்;
மான் கண் காதலர் மாளிகை இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்து, இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்;
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
பூவும், புகையும், மேவிய விரையும்
பகர்வனர் திரிதரும் நகர வீதியும்;
பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்,
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,
மாசு அறு முத்தும், மணியும், பொன்னும்,
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா
வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும்;
பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர்,
மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல் நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்;
கஞ்சகாரரும், செம்பு செய்குநரும்,
மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்,
கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும்,
பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,
துன்னகாரும், தோலின் துன்னரும்,
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி,
பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்;
குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும்,
வழு இன்றி இசைத்து, வழித் திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு
மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் –

~பட்டினப் பாக்கம்#

கோ வியன் வீதியும்; கொடித் தேர் வீதியும்;
பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர்
மாட மறுகும்; மறையோர் இருக்கையும்;
வீழ்குடி, உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும், காலக் கணிதரும்,
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும்;
திரு மணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்;
சூதர், மாகதர், வேதாளிகரொடு
நாழிகைக் கணக்கர், நலம் பெறு கண்ணுளர்,
காவல் கணிகையர்,ஆடல் கூத்தியர்,
பூ விலை மடந்தையர், ஏவல் சிலதியர்,
பயில் தொழில் குயிலுவர், பல் முறைக் கருவியர்,
நகை-வேழம்பரொடு வகை தெரி இருக்கையும்;
கடும் பரி கடவுநர், களிற்றின் பாகர்,
நெடுந் தேர் ஊருநர், கடுங் கண் மறவர்,
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும்;
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும் –

~நாள்-அங்காடிப் பூதத்தை மறக் குடி மகளிர் வழிபடுதல்#

இரு பெரு வேந்தர் முனையிடம் போல
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய
கடை கால் யாத்த மிடை மரச் சோலை,
கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும்,
நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில்-
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை-
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி;
‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி;
மாதர்க் கோலத்து, வலவையின் க்கும்,
மூதில் பெண்டிர் ஓதையின் பெயர-

~பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப் பலி கொடுத்தல#

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்,
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்,
முந்தச் சென்று, முழுப் பலி-பீடிகை,
“வெந் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க” எனப்
பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக’ என –
கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல்,
பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி,
ஆர்த்து, களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து,
சூர்த்து, கடை சிவந்த சுடு நோக்குக் கருந் தலை,
‘வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க’ என,
நல் பலி-பீடிகை நலம் கொள வைத்து, ஆங்கு,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி-

~மண்டபத்தில் பலிஇடல்#

இரு நிலமருங்கின் பொருநரைப் பெறாஅ,
செரு வெங் காதலின், திருமாவளவன்,
வாளும்,குடையும், மயிர்க் கண் முரசும்,
நாளொடு பெயர்த்து, ‘நண்ணார்ப் பெறுக-இம்
மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள்’என,
புண்ணிய திசைமுகம் போகிய அந் நாள்-
‘அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய,
பகை விலக்கியது இப் பயம் கெழு மலை’ என,
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை,
கொடுவரி ஒற்றி, கொள்கையின் பெயர்வோற்கு,
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்,
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்,
நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின: இவை-தாம்
ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும்
அரும் பெறல் மரபின் மண்டபம்- அன்றியும்,

~ஐவகை மன்றங்களில் அரும் பலி இடுதல்#

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக்
கடைமுக வாயிலும், கருந் தாழ்க் காவலும்,
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி,
கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றி,
கொட்பின் அல்லது கொடுத்தலீயாது,
உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்-
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி,
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று,
வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்-
வஞ்சம் உண்டு மயல்-பகை உற்றோர்,
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்,
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்,
கழல் கண் கூளிக் கடு நவைப் பட்டோர்,
சுழல வந்து, தொழ,துயர் நீங்கும்,
நிழல் கால் நெடுங் கல் நின்ற மன்றமும்-
‘தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்,
பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர்’ என,
காதம் நான்கும் கடுங் குரல் எடுப்பி,
பூதம் புடைத்து உணும் பூத-சதுக்கமும்-
அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,
நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,
நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்-
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐ வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ-

~விழாவின் தொடக்கமும் முடிவும் முரசு அறைந்து
அறிவித்தல்#
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால் வெண் களிற்று-அரசு வயங்கிய கோட்டத்து,
கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி-

~கொடி ஏற்றம்#

தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து,
மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து-

~வீதியின் மங்கலத் தோற்றம்#

மரகதமணியொடு வயிரம் குயிற்றி,
பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை,
நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,
கிம்புரி, பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து,
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய, தோம் அறு பசும் பொன்
பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,
பாவை விளக்கு, பசும் பொன் படாகை,
தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து,
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு-

~இந்திரனை நீராட்டுதல்#

ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
அரச குமரரும், பரத குமரரும்;
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்,
கவர் பரித் தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி;
அரைசு மேம்படீஇய, அகநிலை மருங்கில்,
‘ சால் மன்னன் கொற்றம் கொள்க’ என,
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட
தண் நறுங் காவிரி, தாது மலி பெரும் துறை,
புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி,
மண்ணகம் மருள, வானகம் வியப்ப,
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி-

~கோயில்களில் வேள்வி#

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்,
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,
நீல மேனி நெடியோன் கோயிலும்,
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்,
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்-

~கடவுளர் திருவிழா#
நால் வகைத் தேவரும், மூ-அறு கணங்களும்,
பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்-

~அறவுரை பகர்தல்#

அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்,
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்,
திறவோர் க்கும் செயல் சிறந்து ஒருபால்-

~சிறைவீடு செய்தல்#
கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்-

~இசை முழக்கம்#

கண்ணுளாளர், கருவிக் குயிலுவர்,
பண் யாழ்ப் புலவர், பாடல் பாணரொடு,
எண்-அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்-

~விழா மகிழ்ச்சி#
முழவுக் கண் துயிலாது, முடுக்கரும், வீதியும்,
விழவுக் களி சிறந்த வியலுள் ஆங்கண்-

~இளவேனிலும் மலயத் தென்றலும் உலவும் வீதி#

காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங் குழை மாதவி-தன்னோடு
இல் வளர் முல்லை, மல்லிகை, மயிலை,
தாழிக் குவளை, சூழ் செங்கழுநீர்,
பயில் பூங் கோதைப் பிணையலின் பொலிந்து,
காமக் களி மகிழ்வு எய்தி, காமர்
பூம் பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்து,
நாள் மகிழ் இருக்கை நாள்-அங்காடியில்
பூ மலி கானத்துப் புது மணம் புக்கு,
புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து,
குரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு,
திரிதரு மரபின் கோவலன் போல,
இளி வாய் வண்டினொடு, இன் இளவேனிலொடு,
மலய மாருதம் திரிதரு மறுகில்-

~வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்#

கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,
இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி,
அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!-
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்
சீர் வாய் துவலைத் திரு நீர் மாந்தி,
மீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த,
வான-வல்லி வருதலும் உண்டுகொல்!
‘இரு நில மன்னற்குப் பெரு வளம் காட்ட,
திருமகள் புகுந்தது இச் செழும் பதி ஆம்’ என,
எரி நிறத்து இலவமும், முல்லையும், அன்றியும்
கரு நெடுங் குவளையும், குமிழும், பூத்து, ஆங்கு
உள்வரிக் கோலத்து உறு துணை தேடி,
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!-
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி,
பல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்து, தன் அரும் தொழில் திரியாது,
நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி,
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி,
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு!-என
உருவிலாளன் ஒரு பெரும் சேனை
இகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர்
எழுது வரிக் கோலம் முழு மெயும் உறீஇ,
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு-

~மனை புகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாது நடுங்குதல்#

உடன் உறைவு மரீஇ, ஒழுக்கொடு புணர்ந்த,
வடமீன் கற்பின், மனை உறை மகளிர்;
‘மாதர் வாள் முகத்து, மணித் தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங் கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின்,யாவதும்
மருந்தும் தரும் கொல்,இம் மா நில வரைப்பு?’ என
கையற்று நடுங்கும் நல் வினை நடு நாள்-

~கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்#

உள்ளக நறுந் தாது உறைப்ப, மீது அழிந்து,
கள் உக நடுங்கும் கழுநீர் போல;
கண்ணகி கருங் கணும், மாதவி செங் கணும்,
உள் நிறை கரந்து,அகத்து ஒளித்து, நீர் உகுத்தன;
எண்ணு முறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன-
விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து-என்.

 

&

புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவிற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக், கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன. அவ்வேளையில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிக்கின்றன. பிரிவுத்துயரால் கண்ணகிக்கும், ஆனந்த மிகுதியால் மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன

 

புகார்க் காண்டம் $ அந்திமாலைச் சிறப்புச் செய் காதை

மாலைப் பொழுதின் வரவு#

விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்;
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?’ என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள்
முழு நீர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை-

கறை கெழு குடிகள் கை தலை வைப்ப,
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி,
வலம்படு தானை மன்னர் இல்வழி,
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,

தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் – தம்மொடு
மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென –
உரை

~
நிலா – முற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்#

இளையர் ஆயினும் பகை அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையின் திரியாது பால் கதிர் பரப்பி,
மீன் – அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து

இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து,
செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா – முற்றத்து –
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,
கோலம் கொண்ட மாதவி அன்றியும் –

~

காதலரைக் கூடிய மகளிரின் களி மகிழ்வு#

குட திசை மருங்கின் வெள் அயிர் – தன்னொடும்
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து;

வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;

தாமரைக் கொழு முறி, தாதுபடு செழு மலர்,
காமரு குவளை, கழுநீர் மா மலர்,
பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்;
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,
மந்த – மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி,
காவி அம் கண்ணார் களித் துயில் எய்த –

~
கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயர நிலை#

அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்,
கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்ப,
பவள வாள் நுதல் திலகம் இழப்ப,
தவள வாள் நகை கோவலன் இழப்ப,
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப,
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் –

~

காதலரைப் பிரிந்த மாதர்களுடைய நிலை#

காதலர்ப் பிரிந்த மாதர் நோதக,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
வேனில் – பள்ளி மேவாது கழிந்து,
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து, மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த,
தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய,
துணை புணர் அன்னத் தூவியின் செறித்த
இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது,
உடைப் பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து
விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப –

~

வைகறை வரையில் காமன் திரிதல்#

அன்னம் மெல் நடை – நல் நீர்ப் பொய்கை –
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு நோதிறம் பாட,
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;

புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் –
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சார்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர –
நகரம் காவல் நனி சிறந்தது – என்.

~

வெண்பா#

கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே – கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் – பொழுது.

 

&

மாலை நேரத்திலே, தம்முள் கூடினார் இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவுகடந்த வேதனையால், நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்கநிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும், காவலனின் வெண்கொற்றக் குடைபோல, முழுநிலவும் வானிலே விளங்கிற்று. வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப்பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும்.

புகார்க் காண்டம் $ அரங்கேற்று காதை

புகார்க் காண்டம் $ அரங்கேற்று காதை

மாதவியின் நாட்டியப் பயிற்சி்#

தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி – தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் – ஆறு ஆண்டில்
சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி –

~ஆடல் ஆசான்#

இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து – ஆங்கு,
ஆடலும், பாடலும், பாணியும்,தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும்காலை –
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,
கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை –
கூடை செய்த கை வாரத்துக் களைதலும்,
வாரம் செய்த கை கூடையில் களைதலும்,
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் – தன்னொடும் –

~இசையோன்#

யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை –
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் – தானும் –

~முத்தமிழ்ப் புலவன்#

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து,
இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் –

~தண்ணுமை ஆசிரியன்#

ஆடல், பாடல், இசையே, தமிழே,
பண்ணே, பாணி, தூக்கே,முடமே,
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும்,
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் –

~குழலோன்#

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,
பண் அமை முழவின் கண் எறி அறிந்து,
தண்ணுமை முதல்வன் – தன்னொடும் பொருந்தி,
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து – ஆங்கு,
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து, வருவது ஒற்றி,
இன்புற இயக்கி, இசைபட வைத்து,
வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,
வழு இன்று இசைக்கும் குழலோன் – தானும் –

~யாழ்ப் புலவன்#

ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின்
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,
வன்மையின் கிடந்த தார பாகமும்,
மென்மையின் கிடந்த குரலின் பாகமும்,
மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,
கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத்
தளராத் தாரம் விளரிக்கு ஈத்து,
கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்வயின் சேர,
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர,

மேலது உழையுளி, கீழது கைக்கிளை
வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது:
இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,
படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,
குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின்,

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து – ஆங்கு,
இளி முதலாகிய எதிர்படு கிழமையும்,
கோடி, விளரி, மேற்செம்பாலை என
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்,
இணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு – ஆங்கு,
யாழ் மேற்பாலை இட முறை மெலிய,
குழல்மேல் கோடி வல முறை மெலிய,
வலிவும், மெலிவும், சமனும், எல்லாம்

பொலியக் கோத்த புலமையோனுடன் –

~நாட்டிய அரங்கின் அமைப்பு#

எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது,
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,
எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,
ஒரு கோல் உயரத்து,உறுப்பினது ஆகி,
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக,
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,
தோற்றிய அரங்கில் – தொழுதனர் ஏத்த;
பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,
ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து – ஆங்கு;
ஓவிய விதானத்து, பெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;
விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து –

~தலைக்கோல் அமைதி#

பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு,
கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்
புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை
அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,
முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப,
அரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும்
தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,
ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து – ஆங்கு –

~மாதவியின் நாட்டியம் மங்கலப் பாடல்#

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,
வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,
இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க,
வாரம் இரண்டும் வரிசையின் பாட,
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் –
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்.

~இசைக் கருவிகள் ஒலித்த முறை#

குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்
பின் வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.

~அந்தரக் கொட்டு#

ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி,
வந்த முறையின் வழிமுறை வழாமல்,
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,

~தேசிக் கூத்து்#

மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து,
மூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி,
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,

~மார்க்கக் கூத்து#

ஆறும் நாலும் அம்முறை போக்கி,
கூறிய ஐந்தின் கொள்கை போல,
பின்னையும், அம்முறை பேரிய பின்றை,
பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலின்,

~மாதவி மன்னனிடம் பெற்ற பரிசு காவல் வேந்தன்#

இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை,

தலைக்கோல் எய்தி, தலை அரங்கு ஏறி,
விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள் –

~மாதவியின் மாலையைப் பெற்று, கோவலன் அவளுடன் இருத்தல்#

‘அதுவே
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,
வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை,
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த –
மா மலர் நெடுங் கண் மாதவி மாலை
கோவலன் வாங்கி, கூனி – தன்னொடு
மணமனை புக்கு, மாதவி – தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி –
விடுதல் – அறியா விருப்பினன் ஆயினன் –
வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து – என்.

~வெண்பா#

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,
பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்
போக்கினாள் – பூம் புகார்ப் பொன் தொடி மாதவி, தன்
வாக்கினால் ஆடு அரங்கின் வந்து.

 

&

மாதவி என்னும் ஆடல்மகள் சோழன் முன்னர்த் தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த காவல் மன்னன், அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல், அரசனின் பச்சை மாலையையும், ‘தலைக்கோலி’ என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி, ‘நாடக கணிகையர்க்குத் தலைவரிசை’ என நூல்கள் விதித்த முறைமையின்படி, ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள், என்ற பெருமையையும் பெற்றனள். நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கிற பெருந்தெருவிலே, கூனி, மாதவியின் மாலையை விலை கூறுவாள்.கோவலன் அதற்குரிய ஆயிரம் பொன்னையும் தந்து வாங்கினான். கூனியுடனே, தானும் மாதவியின் மணமனைக்குச் சென்றான். குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவையே தன் உள்ளத்திற் சிறிதும் கொள்ளாதவனாகி, தன் வீட்டை, கண்ணகியை, அறவே மறந்து மாதவி வீட்டினிலேயே மாலைத் தங்குவானுமாயினன் என்பதைக் கூறும் பகுதியே அரங்கேற்றுக் காதை.

காலம்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் .
நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது.
மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.
இந்தக் கயவாகு காலம் கி.பி. 114-136
தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.
எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
முதன்மைக் கட்டுரை: சிலப்பதிகாரம் தோன்றிய காலம்
சான்றுடன் மணிமேகலை காலம் :
1. நாகார்ச்சுனரால் உண்டாக்கப்பட்ட மகாயான பௌத்த மதக் கொள்கைகள் மணிமேகலையில் கிடையாது. ஆனால் ஹீனயான பௌத்த மதக்கொள்கைகள் நிரம்பி இருப்பதனால் மணிமேகலை காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டு என்கின்றனர்.

2. கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடுவதால் மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு சான்றுகளை ஒப்பீடு செய்து கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி. இராசமாணிக்கனார் மணிமேகலை காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு என்றார்.

3. சங்கப் புலவர் மாமூலனார் பிறந்த காலம் கி. மு நான்காம் நூற்றாண்டின் மத்திய பகுதி என கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி பாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது . மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் மணிமேகலை காலம் கி. பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் என சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கபட்டுள்ளது தற்காலத்தில்.

 

 

காப்பிய அமைப்பு

சிலப்பதிகாரக் காப்பிய நிகழ்ச்சிகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடு என்னும் மூன்று நாடுகளில் மூவேந்தரின் தலைநகரங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளாம். எனவே இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று காண்டங்களில் முப்பது காதைகள் அமைந்துள்ளன. (காண்டம் – பெரும் பிரிவு; காதை = சிறு பிரிவு)

* பெயர்க்காரணம் : இந்தக் காப்பியத்தின் கதை சிலம்பினைக் காரணமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயரிடப்பட்டது.

 

காப்பிய நோக்கம்

காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெறுகின்றன. கோவலனும் கண்ணகியும் வானவர் உலகு (வீடு) செல்வதும் காட்டப்படுகிறது. எனினும் காப்பியத்தில் இளங்கோவடிகளின் நோக்கம் அறமே எனலாம். தம்மை அறவுணர்வு உந்த, தாமும் மக்களிடம் அறவுணர்வை விழிப்புறச் செய்ய இளங்கோவடிகள் பாடியது சிலப்பதிகாரம்.

 

காப்பியச் சிறப்பு

சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்னிருந்த தமிழிலக்கியம் அகத்திணை, புறத்திணைப் பாடல்களே. அவை தனிமனித உணர்ச்சிகளைப் பொதுமையில் நின்று உணர்த்தின. ஆனால் ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாக, பெருங்காப்பியமாக, அமைந்தது சிலப்பதிகாரம் ஆகும்.

* காப்பியத் தலைவி

காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன் நிகரில்லாத தலைவியாகப் போற்றப்படுகின்றாள்.

முத்தமிழ்க் காப்பியம்

இளங்கோ அடிகள் இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் பயன்படுத்தியுள்ளார். அதனால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.

* மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

சிலப்பதிகாரம் இவ்வுலக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. அவையாவன:

  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
  • உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
  • ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பது

(பிழைத்தல் = தவறு செய்தல்; கூற்று = எமன்; உரை சால் = புகழ்மிகுந்த; உருத்து = சினந்து) இவை சிலப்பதிகார நூல் முழுமையும் விரவி வந்துள்ளதைக் காணலாம்.

காப்பியப் பெருமை

சிலப்பதிகாரக் காலத்தில் வழக்கிலிருந்த தமிழர்தம் பண்பாடு, சமய நெறிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்காப்பியம் பெரிதும் துணைநிற்கும். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பெருமையைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” எனப் பாராட்டியுள்ளார்.

மதுரைக் காண்டம் $ வேட்டுவ வரி

ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்#

கடுங் கதிர் திருகலின், நடுங்க அஞர் எய்தி,
ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து-ஆங்கு,
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர். உப்பால்-

~சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்#

வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்
பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,
கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப,
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,
‘கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன;
மறக் குடித் தாயத்து வழி வளம் சுரவாது,
அறக் குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்;
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டு உண் மாக்கள்! கடம் தரும்’ என-ஆங்கு-

~மறக் குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல் #

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,

மதுரைக் காண்டம் $ காடுகாண் காதை

உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டுத் தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில் உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்#

திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி

 

~மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்தியவண்ணம் இள மரக் காவில் புகுதல்#

தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று,
வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி

புகார்க் காண்டம் $ மனையறம் படுத்த காதை

எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் பள்ளிக் கட்டிலின் மீது கோவலனும் கண்ணகியும் வீற்றிருத்தல் #

உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,
பரதர் மலிந்த, பயம் கெழு, மா நகர்-
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட:
குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர – குருவின் ஒப்பத் தோன்றிய
கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி –

~தென்றலைக் கண்டு மகிழ்ந்து, இருவரும் காதல் கைம்மிக, நிலா-முற்றம் போதல்#

கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை,
வயல் பூ வாசம் அளைஇ; அயல் பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு,
கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,
தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்று;
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,
மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங் கண் நுழைந்து,
வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து,
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,

~இருவரும் இன்புற்றிருத்தல்#

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:

~கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல் அவயவங்களின் அருமையைப் புகழ்தல்#

‘குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக – திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க:
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் –
படை நினக்கு அளிக்க – அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே –
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?

~கண்ணகியின் சாயலையும் நடையையும் மொழியையும் புகழ்தல்#

மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் – நுதல்! மெல் நடைக்கு அழிந்து,
நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;
அளிய – தாமே, சிறு பசுங் கிளியே –
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:

~கண்ணகியை அணிசெய்வித்தலும் வேண்டுமோ என்று கோவலன் கூறுதல்#

நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நான நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?
திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?

~காதல் மொழிகள்#

மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை’-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் –

~கோவலனும் கண்ணகியும் நடத்திய இல்லறம்#

வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு – அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின் –
காண் தகு சிறப்பின் கண்ணகி – தனக்கு – என்.

~வெண்பா#

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
நிலையாமை கண்டவர் போல், நின்று.

 

&

திருமணத்தால் ஒன்றுப்பட்ட கோவலனும் கண்ணகியும் தம்முட்கூடி இல்லறம் நிகழ்த்திய செய்திகள் பலவும் இதன்கண் கூறப்படுகின்றன. சில ஆண்டுகளாக அவர்களின் இல்வாழ்வும் இன்பமுடனேயே கழிந்தது என்பதனையும், அவர்களைத் தனி மனைக்கண் பெற்றோர் இருத்தியதையும், அவர்கள் தனிக் குடும்பமாக வாழத்தொடங்கியதையும் இக் காதை கூறுகிறது.

புகார்க் காண்டம் $ மங்கல வாழ்த்துப் பாடல்

வாழ்த்தும் வணக்கமும்#

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

~

புகார்ச் சிறப்பு#

ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,

~

கண்ணகியின் குலமும் நலமும்#

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

~

கோவலனது பெருநலம்#

ஆங்கு,
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான்,
மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ.

~

திருமணச் செய்தியை அறிவித்தல்#

மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ.

 

&

புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர்.

கதை

காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர்.

கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.

பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை , சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி ” நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?” என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, “ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் ” என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்” கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி “அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது” என்றாள். அதற்கு அரசன் “நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே” என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்” என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்

இளங்கோவடிகள்

இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் ‘பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்’ எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

காப்பிய அமைப்பு

சிலப்பதிகாரக் காப்பிய நிகழ்ச்சிகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடு என்னும் மூன்று நாடுகளில் மூவேந்தரின் தலைநகரங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளாம். எனவே இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று காண்டங்களில் முப்பது காதைகள் அமைந்துள்ளன. (காண்டம் – பெரும் பிரிவு; காதை = சிறு பிரிவு)

* பெயர்க்காரணம் : இந்தக் காப்பியத்தின் கதை சிலம்பினைக் காரணமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயரிடப்பட்டது.

 

காப்பிய நோக்கம்

காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெறுகின்றன. கோவலனும் கண்ணகியும் வானவர் உலகு (வீடு) செல்வதும் காட்டப்படுகிறது. எனினும் காப்பியத்தில் இளங்கோவடிகளின் நோக்கம் அறமே எனலாம். தம்மை அறவுணர்வு உந்த, தாமும் மக்களிடம் அறவுணர்வை விழிப்புறச் செய்ய இளங்கோவடிகள் பாடியது சிலப்பதிகாரம்.

 

காப்பியச் சிறப்பு

சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்னிருந்த தமிழிலக்கியம் அகத்திணை, புறத்திணைப் பாடல்களே. அவை தனிமனித உணர்ச்சிகளைப் பொதுமையில் நின்று உணர்த்தின. ஆனால் ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாக, பெருங்காப்பியமாக, அமைந்தது சிலப்பதிகாரம் ஆகும்.

* காப்பியத் தலைவி

காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன் நிகரில்லாத தலைவியாகப் போற்றப்படுகின்றாள்.

முத்தமிழ்க் காப்பியம்

இளங்கோ அடிகள் இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் பயன்படுத்தியுள்ளார். அதனால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.

* மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

சிலப்பதிகாரம் இவ்வுலக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. அவையாவன:

  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
  • உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
  • ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பது

(பிழைத்தல் = தவறு செய்தல்; கூற்று = எமன்; உரை சால் = புகழ்மிகுந்த; உருத்து = சினந்து) இவை சிலப்பதிகார நூல் முழுமையும் விரவி வந்துள்ளதைக் காணலாம்.

காப்பியப் பெருமை

சிலப்பதிகாரக் காலத்தில் வழக்கிலிருந்த தமிழர்தம் பண்பாடு, சமய நெறிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்காப்பியம் பெரிதும் துணைநிற்கும். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பெருமையைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” எனப் பாராட்டியுள்ளார்.